பூநகரி பகுதியில் நடைபெற்ற விபத்தில் பல்கலை மாணவன் பலி!
டிப்பரும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டு உள்ளதுடன், குறிப்பிட்ட மாணவன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
விபத்து தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இறந்த மாணவன் யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவனும்,தேசிய ரீதியில் டேபிள் டென்னிஸ் பல சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். அத்துடன் பாடசாலை கிரிக்கெட் அணி தலைவனாகவும் சிறந்த ஒழுக்கமுள்ள மாணவனாகவும் திகழ்ந்த்துள்ளார். மாணவனின் தந்தை ஒரு ஆசிரியர் என்பதுவும் குறிப்பிட தக்கது.