Breaking News

ஊடகவியலாளரிடம் மன்னிப்பு கோரினார் பொலிஸ் பரிசோதகர்!

ஊடகவியலாளர் அகில ஜயவர்தனவிடம் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ மன்னிப்பு கோரியுள்ளார். 

கொழும்பில் நேற்றைய தினம் (10) வழக்கு ஒன்று தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புகைப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்த்தன போதைவஸ்து தடுப்பு பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவவினால் அச்சுறுத்தப்பட்டிருந்தார். 

இந்நிலையில், தன்னால் குறித்த ஊடகவியலாளருக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மன்னிப்பு கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.