இலவசமாக உதயன் பத்திரிகையை விநியோகம் செய்த சுமந்திரன் - காரணம் என்ன?
இன்றைய உதயன் பத்திரிகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக வெளியிட்ட செய்தியொன்றுக்கு இந்த வெளியீட்டின் பிரதிகளை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு இலவசமாக சுமந்திரன் விநியோகித்தார்.
அதில் தமிழ் தேசியத்தைக் காக்க சுமந்திரனை தோற்கடிப்போம் ( புலிகளின் மூத்த உறுப்பினரும் மாவீரரின் தந்தையுமான பஷிர் காக்கா அறைகூவல்) என அவரது ஊடக சந்திப்பு கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு முன்னதாக அங்கு வந்திருந்தவர்களுக்கு வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை இலவசமாக வழங்கிவைத்தார்.