மெல்பேர்னில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுள்ளது!
ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் கொரோன வைரஸ் தொற்று இரண்டாவது அலை பரவியுள்ள நிலையில் நோய் தொற்று சடுதியாக அதிகரத்ததை தொடர்ந்து அங்கு நாளை புதன் கிழமை நள்ளிரவு முதல் 6 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மிட்செல் ஷைர் (Mitchell Shire) நகரத்திலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால் அங்கும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு விதிக்கப்படுள்ளது.
இந்த மாநிலத்தில் கடந்த நாளில் 191 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுள்ளனர்.இதனையடுத்து இந்த ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளது.