வாக்குச் சீட்டுகளைப் பெறாத வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்? - தேர்தல் ஆணையம்
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை ஒப்படைப்பது இன்று (11) முதல் தொடங்குகிறது.
இது இன்று, நாளை (12) மற்றும் நாளை மறுநாள் (13) வரை நடைபெற உள்ளது.
வாக்குச் சீட்டுகளின் விநியோகம் ஜூலை 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது, அந்த தேதிக்கு முன்னர் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளைப் பெறாத வாக்காளர்கள் அந்தந்த தபால் நிலையங்களுக்குச் சென்று உறுதிப்படுத்தி அதிகாரப்பூர்வ வாக்குச் சீட்டுகளைப் பெற முடியுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவுகள் 14, 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
அரசு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இந்த மாதம் 14, 15 தேதிகளில் அஞ்சல் வாக்குப்பதிவு நடைபெறும். என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அந்த நாட்களில் வாக்களிக்க முடியாத அரசு ஊழியர்களுக்கு அஞ்சல் வாக்குப்பதிவு ஜூலை 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.