சம்பத் வங்கியின் இனவாதத்துக்கு அதிரடியாக பதில் கொடுத்த மங்கல சமரவீர!
சம்பத் வங்கியுடன் நெருங்கிய வியாபாரத் தொடர்புகளை பேணி வரும் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான
நிமல் பெரேரா தனது ட்விட்டர் கணக்கில் பின்வருமாறு பகிரங்கமாக பதிவிட்டுள்ளார்.
"சம்பத் வங்கி நிறுவப்பட்டிருப்பது சிங்கள பௌத்தர்களுக்கு சேவை வழங்குவதற்கு மட்டுமே அது தான் உண்மை இப்படி சொல்வதால் என்னை ஒரு இனவாதியாக பார்க்க வேண்டாம் என பதிந்துளார்"
பிரபல தொழிலதிபர் நிமல் பெரேராவின் பதிவுக்கு பதிலடியாக முன்னாள் நிதி அமைச்சர் மங்கல சமரவீர கீழ்வரும் பதிவினை தனது ட்விட்டர் கணக்கில் பதிந்துளார்.
சம்பத் வங்கி நிறுவப்பட்டிருப்பது
அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் சேவை வழங்க அல்ல என்பது தொடர்பில் என்னை அறிவூட்டியதற்கு நிமல் பெரேராவுக்கு எனது நன்றிகளை தெரிவிப்பதுடன் சம்பத் வங்கியில் இருக்கும் எனது வங்கி கணக்கை ஜாதி மதம் குளம் பாராது நாட்டின் அனைத்து மக்கள் பிரிவுக்கு பொதுவான சேவை வழங்கும் வங்கியொன்றுக்கு மாற்றும்
படி எனது காரியாலத்துக்கு நான் அறிவித் துள்ளேன் எனவும்.
அதனால் சம்பத் வங்கிக்கு
பாரிய நஷ்டம் ஏதும் ஏற்படப் போவதில்லை என்றாலும் மனித விழுமியங்களை பேணி வாழ்பவன் என்ற வகையில் எனக்கு இது மிக முக்கியமானதும் மேலானதுமாகும்.
இனவாதத்துக்கு எதிரான தனது நிலைப்பாட்டை தைரியமாக முன்வைத்து செயல்படுத்தியும் காட்டியுள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் மங்கல சமரவீர.