வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்!
வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீண்டும் அழைத்து வரும் செயற்பாட்டினை எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என இச் செயல்முறையை ஒருங்கிணைக்கும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
தற்போது தனிமைப்படுத்தல் நிலையத்தில் இடம் குறைவாக உள்ளத்துடன் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்துடன் கையாண்ட நபர்களின் குடும்பங்களின் கணிசமான எண்ணிக்கையிலானோர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கமைய வெளிநாடுளிருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை அடுத்த சில நாட்கள் மட்டுமே நடைபெறும் என அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், மத்திய கிழக்கு மற்றும் மாலைதீவு உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த இலங்கையர்கள் அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.