கொரோனா விவகாரத்தால் WHO லிருந்து விலகுகிறது அமெரிக்கா!
உலக சுகாதார அமைப்பிலிருந்து முறைப்படி அமெரிக்கா வெளியேறியதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா.
நோய்த்தொற்று பரவல் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு சரியான நேரத்தில் எச்சரிக்கவில்லை எனவும், சீனாவிற்கு ஆதரவாக அந்த அமைப்பு செயல்படுவதாகவும் அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டினர்.
தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பிற்கான நிதியை நிறுத்திய ட்ரம்ப், அந்த அமைப்பில் இருந்து விலகப் போவதாகவும் அறிவித்து இருந்தார். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து முறைப்படி அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவை விலக்கிக் கொண்டதாக, ஜனநாயகக் கட்சியின் செனட்டர் ராபர்ட் மெனண்டெஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.