கட்சி தலைவர் பதவிக்கு விடைகொடுக்கிறார் மைத்திரி!
பாரம்பரிய அரசியலை ஒதுக்கி புதிய சிநதனை உள்ள இளைஞர்கள் கைகளில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையை ஒப்படைக்க உள்ளதாக கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி தலைமை பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
களுத்துறை பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எதிர்வரும் காலங்களில் கட்சியின் ஆலோசகராக மாத்திரம் செயற்பட உள்ளதாக மைத்திரி கூறினார்.
கட்சி பிளவுபட்டுள்ளதாக பலர் கூறுகின்ற போதும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்னும் பலதாக உள்ளதென அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் இளைய தலைமை ஊடாக கட்சி மேலும் முன்னேற்றமடையும் என அவர் சுட்டிக்காட்டினார்.