எடை குறைக்க நினைப்பவர்கள் இரவில் என்ன உணவு சாப்பிடணும்?
உடல் எடை குறைப்பது என்பது பெரும்பாலானோர்க்கு ஒரு சவாலாக இருக்கிறது.
எடையை குறைப்பதற்கான முதல் அடி இரவு உணவில் கட்டுப்பாடு.இரவு உணவு என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்கிற பட்டியல் இங்கே.
நீங்கள் எடை குறைக்க முயற்சிக்கிறீர்களா அப்படி என்றால் நீங்கள் இரவு உணவு என்ன சாப்பிட வேண்டும் எப்படி சாப்பிட வேண்டும் என்று ஒரு ஊட்டச்சத்து நிபுணர் கூறும் பட்டியல் இங்கே.
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் உடல் எடையை குறைப்பது மிகவும் சவாலான விஷயமாக இருக்கிறது.இரவு உணவை குறைத்துக் கொண்டாலே உடல் பருமன் ஓரளவு குறைய ஆரம்பித்துவிடும்.எனது வாடிக்கையாளர்கள் பலர் நாங்கள் தினந்தோறும் ஆரோக்கியமான உணவை சரியாக சாப்பிட்டு வருகிறோம் என்று என்னிடம் கூறுகிறார்கள். நாம் ஆரோக்கியமான இரவு உணவை எடுத்துக் கொண்டாலே உடல் பருமனை குறைப்பது எளிதாகிவிடும்.அதற்கு நாம் செய்ய வேண்டியை இங்கே
எது பெஸ்ட் சாய்ஸ்!
நீங்கள் சமைக்கும் மனநிலையில் இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும்?
உணவங்களுக்கு செல்லுங்கள் ஆனால் அங்கு வேக வைத்த காய்கறிகள் மற்றும் பழுப்பு நிற அரிசி உணவு வகைகளை வாங்கி உண்ணுங்கள்.இரவில் காய்கறி சூப் உண்ணுங்கள்.இதன் மூலம் சர்க்கரை மற்றும் ஸ்டார்ச்சினால் உடலில் ஏற்படக்கூடிய பாதிப்பை தவிர்க்கலாம். ஒரு சிறிய கிண்ணத்தில், இரண்டு தேக்கரண்டி பாதாம் வெண்ணெய், ஒரு தேக்கரண்டி பழுப்பு அரிசி வினிகர், ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒன்றாக கிளறவும். புதிதாக அரைத்த இஞ்சி மற்றும் துண்டு துண்தாக வெட்டப்பட்ட பூண்டு ஒவ்வொன்றும் ஒரு அரை டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும் மற்றும் சிவப்பு மிளகு தூள் ஒரு டீஸ்பூன் சேர்க்கவும்.உங்கள் இரவு உணவிற்கு இந்த பாதாம் கலவையுடன் காய்கறிகள் மற்றும் இறால் சேர்த்து பழுப்பு நிற அரிசியுடன் உண்ணுங்கள்.
நீங்கள் ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்புகிறீர்களா!
பலர் வேலை முடிந்து அலுவலகத்தில் இருந்து நேரம் கழித்து தான் வீட்டிற்கு செல்வார்கள்.அப்பொழுது வீட்டில் இரவு உணவு தயாராக இல்லையென்றால் பசியுடன் காத்திருப்பது மிகவும் கடினமான விஷயம்.அந்நேரம் ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸை உண்ணாமல் பாதாம் பருப்பு,பச்சை பயிறு போன்ற பருப்பு வகைகளை அளவுடன் சாப்பிட்டால் உடலில் ஆரோக்கியமும் கூடும் பசியின்மையும் தீர்ந்துவிடும். அல்லது காய்கறி சூப், பழ ஜுஸ் போன்றவற்றை கூட தேர்வு செய்யலாம்..இல்லையென்றால் காய்கறி சாலட் சாப்பிடலாம் அதுமட்டுமின்றி நன்கு வேக வைத்த கீரை சூப் அருந்தலாம்.
புரதச் சத்து அதிகம் உள்ள உணவை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.
இரவு உணவு என்ன சமைக்கலாம்?
முட்டையுடன் பாதாம் பால் சேர்த்து நன்கு கலக்கவும். அத்துடன் நன்கு நறுக்கிய பூண்டு,சிறிது மிளகு, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்க வேண்டும். இந்த உணவு அதிக அளவு புரதம் ஆரோக்கியமும் நிறைந்தது.
அதுமட்டுமின்றி நன்கு வேக வைத்த அனைத்து விதமான காய்கறிகள், கீரை வகைகள் போன்றவற்றை கூட இரவு உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
நீங்கள் ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால் இறால், கீரை வகைகள், எலுமிச்சை பழ ஜீஸ் ஆகியவற்றை தேர்வு செய்யுங்கள். இனிப்பாக சாப்பிட விரும்பினால் பழ வகைகளை தேர்வு செய்து சாப்பிடுங்கள்.
இவ்வாறு குறைத்த அளவு கொழுப்பு மற்றும் ஹார்போஹட்ரேட் உள்ள உணவை இரவில் சாப்பிட்டு வர உடல் எடை வேகமாக குறைந்துவிடும்.