ராகமாவில் தனியார் மருத்துவமனையில் கொரோனா பரவல்! மருத்துவமனை மூடப்பட்டது!
ராகமாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை மூட சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஏனெனில் மருத்துவமனையில் ஒரு அதிகாரி கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதன் காரணமாகவே இந்த முடிவு எடுத்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மருத்துவமனை அதிகாரியின் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என நம்பப்படும் மருத்துவமனையின் பல ஊழியர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.