பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுப்படுபவர்களை கைது செய்ய உத்தரவு.
வேட்பாளர்களின் புகைப்படங்கள் பதிக்கப்பட்ட ஆடைகளை அணிதல், துண்டு பிரசுரங்களை விநியோகித்தல் மற்றும் வீடு வீடாக சென்று பிரச்சார பணிகளில் ஈடுப்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர் காவற்துறை அதிகாரி ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இவ்வாறான குற்றங்களை புறிபவர்களை உடனடியாக கைது செய்ய்ப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.