இலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! - சமூக பரவல்
இலங்கையில் மேலும் 5 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2464 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் இருவர் வெலிகந்த பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய மூவரும் ஹபராதுவ, ராஜாங்கனை மற்றும் லங்கபுர பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1980 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது, 473 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.