பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பரிதாப பலி!
மொரட்டுவ,லுணாவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த குறித்த நபரின் முச்சக்கரவண்டி பௌலிஸார் சோதனையிட முற்பட்டபோது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்ட்டில் இறந்தவர் 39 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.