கந்தகாடு கைதிகளை பார்வையிட வந்த உறவினர்களில் 119 பேர் தனிமைப்படுத்தல்!
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகளை பார்வையிட வந்த அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 119 பேர் தற்போதைய நிலையில் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த தரப்பினரை இராணுவத்தின் பங்களிப்புடன் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அததெணவிற்கு தெரிவித்தார்.
குறித்த உறவினர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய கைதிகளை சந்தித்துள்ளதாக தெரிவித்த இராணுவத் தளபதி, கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதன் அருகில் அமைந்துள்ள கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் வைத்தியசாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஆலோசகராக பணிபுரிந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களும் தற்போதைய நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து விடுமுறைக்காக சென்றுள்ள 08 ஆலோசகர்களை மீள அழைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.