தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ள 8 பேருக்கு மலேரியா!
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருகை தந்த இலங்கையர்கள் 8 பேர் மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ள 8 பேரே இவ்வாறு மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேரியா ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர.
பெல்வெஹர தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள 5 பேர் மற்றும் நீர்கொழும்பு வைக்கால பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள 3 பேர் இவ்வாறு மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2012 ஆண்டு முதல் இலங்கையில் எவரும் மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்படவில்லை என்பதுடன் வெ ளிநாடுகளில் இருந்து வருகை தந்த பலர் மலேரியாவினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் மாத்திரம் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 53 மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் ஒரே நேரத்தில் அதிகளவான மலேரியா நோயாளிகள் இனங்காணப்பட்ட முதல் சந்தர்ப்பம் இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலமையயை கருத்திற் கொண்டு மலேரியா அவதானம் உள்ள நாடுகளில் இருந்து வருகை தருபவர்களை பி.சீ.ஆர் பரிசோதனைக்கு மேலதிகமாக மலேரியா பரிசோதனைக்கும் உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.