தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி கோட்டாபய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்!
ஆயிரம் ரூபா தருவதாகக் கூறி தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றிய இந்த கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருமாகிய ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2020 மார்ச் முதலாம் திகதி முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் வாக்குறுதி அளித்திருந்தது.
அந்த வாக்குறுதி அளிக்கப்பட்ட ஏழு மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இதனால் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே தொழிலாளர்களை ஏமாற்றிய இந்த அரசாங்கத்திற்கு ஓகஸ்ட் 5ம் திகதி அனைவரும் இணைந்து தக்க பாடம் கற்பிக்க வேண்டுமென ஹக்கீம் கேட்டுக் கொண்டுள்ளார்.