முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்!
எவன்காட் நிறுவனத்தை தன்னிச்சையான முறையில் கையகப்படுத்தியதன் காரணமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து அதன் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் 17 பேருக்கு அழைப்பாணை வெளியிடப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவரத்ன உள்ளிட்ட 17 பேர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித்த சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க மற்றும் அனுர குமார திஸாநாயக்க ஆகியவர்கள் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.