இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்படும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் முகக்கவசம் அணிவது மிக அவசியமாகும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சுகாதார விதி முறைகளுக்கு மாறாக செயல்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றம் அவர் கூறியுள்ளார்.