Breaking News

அமெரிக்காவிற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வழக்கு விவாதம் !

அமெரிக்காவில் நடத்தப்பட்ட இன வன்முறை, பொலிஸ் வன்முறை மற்றும் அமைதியான போராட்டங்களுக்கு எதிரான வன்முறை ஆகியவை விவாதிக்கப்பட உள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை (யு.என்.எச்.ஆர்.சி) இன்று அறிவித்தது. 

அதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை புதன்கிழமை இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தும். 

கடந்த வாரம் புர்கினா பாசோ விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை இந்த முடிவை எடுத்ததுள்ளது. புர்கினா பாசோ கடந்த வாரம் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இதேபோன்ற கோரிக்கையை விடுத்தார். 

 ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணம் ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல இது ஒரு இன வன்முறை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.