Breaking News

சுமந்திரனுக்காக பிரச்சாரம் செய்யமுடியாது-சசிகலா ரவிராஜ்

சுமந்திரனுக்காக பிரச்சாரம் செய்யமுடியாது என மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் முடிவு தொடர்பில் அவர் தனது ஆதங்கத்தை தனது உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

வழமையாக சுமந்திரனின் வெற்றிக்காக பலிக்கடாவாக்கப்படும் புதியமுகங்களுக்கு தமது பிரச்சாரத்தில் தமது இலக்கத்தையும் சுமந்திரனின் இலக்கத்திற்கும் வாக்குகேட்கும் உத்தி இம்முறை தென்மராட்சியில் புஸ்வாணமாகியுள்ளது.

வழமையாக சிறிதரனின் கூட்டத்தில் கலந்துகொண்டு அவரை மகிழ்வித்து அவரதுஆதரவாளர்கள் மூலம்  சிறிதரன் மற்றும் மாவை மூன்றாம் தெரிவு சுமந்திரனாக இருந்தது அதுபோல யாழில் கழமிறங்கும் புதிய வேட்பாளர்களையும் அவர்களது இலக்கத்திற்கும் அடுத்து கட்சிதலைவர் மாவை அடுத்தது சுமந்திரனென அவரது அடிபொளிகளால் நாசூக்காக நகர்த்தும் விருப்புவாக்கு வேட்டை இம்முறை தென்மராட்சியில் பலிக்கப்போவதில்லை என்கின்றது அங்கிருந்து வரும் செய்திகள்.

இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற கட்சி கூட்டத்தில் சுமந்திரனின் வலது கரமான சயந்தனால் நகர்த்தப்பட்ட சுமந்திரனுக்காக வாக்கு சேகரிக்கும்  திட்டமும் அவரை மேடையில் அவமதித்த செயற்பாடும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது இதனை மாமனிதர் ரவிராஜ் அவர்களின் மனைவி அடியோடி நிராகரித்துள்ளார்.





இது தொடர்பிர் அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...

எனக்கு நேற்று நேர்ந்த எதிர்பாராத சம்பவம்!! அன்பான மக்களே உங்களிடம் சில நிமிடங்கள்....

நேற்றைய தினம் சாவகச்சேரி தமிழரசுக் கட்சி கிளையின் ஏற்பாட்டில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம் தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரி கிளையின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கே.சயந்தன் தலைமையில் இடம்பெற்றது.

பொது மேடையில் சபை நடைமுறை தெரியாமல் நடந்து கொண்ட சயந்தன்

என்னை பேசுவதற்கு அழைக்கும் போது கே.சயந்தன் நடந்து கொண்ட விதம் மனதிற்கு வேதனையைத் தருகிறது.

சபை நாகரீகம் தெரியாது நடந்து கொள்வது மிக வேதனையானது.

அவர் கூறும் நபரை ஆதரித்து என்னால் வேலை செய்ய முடியாது

என்னுடைய கணவன் மிக துணிச்சலானவர் மக்களுடன் மக்களாக வாழ்ந்தவர் இப்படியான ஒருவரின் மனைவியான நானும் அவரின் பாதையில் பயணிக்க சயந்தன் பல முட்டக் கட்டைகளை போடுவதுடன் எனக்கும் என் தொகுதி மக்களிற்கும் எதிரான நபரை என்னால் ஆதரிக்க முடியாது.

எமது கட்சித் தலைமை மதிப்புக்குரிய மாவை ஐயாவின் வழிநடத்தலில் தொடர்ந்து பயணிக்க என்னால் முடியும்.

விடுதலைப் போராட்டத்திற்கு எதிர் நிலைப்பாட்டுடன் இருப்பவர்களுடன் என்னால் பயணிக்க முடியாது.

செய்தி திருத்தம்

இந்த செய்தி தொடர்பில் சுமந்திரனின் கடும் அழுத்தத்தின் பின் இந்த முகப்புத்தகம் தனது இல்லை என்பதை சசிகலா ரவிராஜ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் என்பதோடு இந்த செய்தியில் இடம்பெற்ற சம்பவம் உண்மை என்பதையும் இந்த முகப்புத்தகமும் அவரது முக்கியமான ஆதரவுநபராலேயே இயக்கப்படுகிறது என்பதும் இடம்பெற்ற சம்பவம் உண்மை