பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா பாதிப்பு உறுதி!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனும், ஆல்ரவுண்டருமான ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடிய ஷாகித் அப்ரிடி, பாகிஸ்தானுக்காக 27 டெஸ்ட், 398 ஒருநாள் போட்டிகள், 99 சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் தகவலை அப்டிரி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், 'எனக்கு வியாழக்கிழமையில் இருந்து உடல் நலம் சரியாக இல்லை. உடலில் வலி ஏற்பட்டது. இதனால் நான் பரிசோதனை மேற்கொண்டேன். துரதிருஷ்டவசமாக கொரோனா பாதிப்பு எனக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இறைவன் நாடினால் பாதிப்பிலிருந்து மீண்டு வருவேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்' என்று கூறியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 8,064 ரன்களும், டெஸ்டில் 1,716 ரன்களும், 20 ஓவர் போட்டிகளில் 1,416 ரன்களும் அப்ரிடி எடுத்துள்ளார்.
பேட்டிங், பந்து வீச்சு என இரு முனைகளிலும் எதிரணியை திணறடிப்பதில் அப்ரிடி வல்லவர். ஒரு நாள் போட்டிகளில் அவர் 395 விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறார். டெஸ்டில் 48ம், 20 ஓவர் போட்டிகளில் 98 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் அப்ரிடி.