ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக திபெத்தியர்கள் ஜெனீவாவில் போராட்டம்
ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்பாக ஈழத் தமிழர்களுக்காகவும் திபெத்தியர்கள் போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர்.
திபெத்திய மக்கள், தங்களது ஜனநாயக உரிமைப் போராட்டத்தினை ஐ.நா மனிதவுரிமைகள் பேரவை முன்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த போராட்டத்தின்போது, உலகில் இனப்பாகுபாட்டிற்காகவும் மதரீதியான பாகுபாட்டிற்கும் எதிராகவும் இனவழிப்புக்காகவும் ஐ.நா குரல் எழுப்ப வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
அத்துடன் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும் இன்றைய போராட்டத்தின்போது, திபெத்திய போராட்டக்காரர்களால் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, இராணுவத்தினரால் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவோமென அனைத்துலக மனித உரிமை சங்கத்தின் ஜெனிவா பிரதிநிதி சீவரத்தினம் கிரிதாசன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.