பாலிதா தேவரப்பெருமாவுக்கு அவசர இருதய அறுவை சிகிச்சை !
யு.என்.பி களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் துணை அமைச்சருமான பாலிதா தேவரபெருமா உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அவசர இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாலிதா தேவரப்பெருமா நீண்ட காலமாக மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.