சுமத்திரன் பேசுவது வெறும் பொய்யே - ஊடகவியலாளர் சந்திப்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
கூச்சமே இல்லாமல் பொய் பேசுகிறார் சுமந்திரன். இதை நான் முன்பும் பல தடவைகள் கூறியிருக்கின்றேன் என்று கடிந்து கொண்டார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன். இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவி யலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித் துள்ளார்.
சுரேஷ் பிரேமச்சந்திரன் தொடர்த்து தெரிவித்த கருத்து வருமாறு
ஓரிரு நாள்களுக்கு முன்பாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் ஒரு சில விடயங்களைக் கூறி இருக்கின்றார்கள்.
முக்கியமாக மீன்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மிக அதிகபட்சமாக ஆச னங்களுடன் நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என்றும் ஒரு மாற்று அணியோ மாற்றுத் தலைமையோ தேவையற்ற விடயங்கள் என்றும் கூறியுள்ளார்.
இந்த நாட்டில் ஒரு ராணுவ ஆட்சி வர இருக்கிறது, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பிளவடைந்துபோயுள்ள நிலையில் தாங்கள் மீண்டும் போனால் ஒரு பலமான சக்தியாக வந்து சில சம யம் மீண்டும் ஒருமுறை நாங்கள்
எதிர்க்கட்சித் தலைமையைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படும், அவ்வாறு பெற்றுக்கொள்வதன் ஊடாக பல விடயங் களை சாதிக்க முடியும் என்ற தோரணை யில் சில கருத்துக்களை தெரிவித்திருக் கிறார்கள்.
அது ஊடகங்களிலும் வெளி வந்திருக்கின்றது.
ஆகவே அதனடிப்படையில் தமிழ்
மக்கள் தேசியக் கூட்டணி சார்பாகச் சில கருத்துகளைத் தெரிவிக்க விரும்புகின் றோம்.
யுத்தத்திற்கு பிற்பாடு தமிழ் மக்கள் ஐக்கியத்தின்மேல் நம்பிக்கை கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு பல விடயங் களை சாதிக்கும் என்ற நம்பிக்கையோடு அதன் உறுப்பினர்களை நாடாளுமன் றம் அனுப்பி இருந்தார்கள். ஆனால், இவர்கள் கூறியது போன்று அல்லது இவர்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியைப் போன்று கடந்த நான் கரை வருட காலத்தில் எதையாவது சாதித் திருக்கிறார்களா?
காணிகள் விடுவிப்பாக இருக்கலாம், அரசியல் கைதிகள் விடுவிப்பாக இருக்கலாம், காணாமலாக்கப்பட்டோர் விவகார மாக இருக்கலாம், ஒரு புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதாக இருக்கலாம், இவை எதிலும் அவர்கள் வெற்றி பெற வில்லை.
சுமந்திரன் கூறுகின்ற போது ஒரு பகுதி காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன, ஒரு பகுதி அரசியல் கைதிகள் விடு விக்கப்பட்டுள்ளார்கள், அரசமைப்பு உரு வாக்கத்தில் நாங்கள் மிக நீண்ட தூரம் போயிருக்கின்றோம், துரதிஸ்டவசமாக அது சாத்தியப்படவில்லை போன்ற சில விடயங்களை அவர் தொடர்ச்சியாகச் சொல்லிவருகின்றார்.யாழ்ப்பாணத்திலும் சரி கிழக்கிலும் சரி அவ்வாறான சில விடயங்களை சொல்லி வருகின்றார்.
மக்கள் ஒரு விடயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். கடந்த நான்கரை வருட காலத்தில் வடக்கு மாகாணத்தில் எத்தனை ஏக்கர் காணிகள் முப்படைகளால் விடுவிக்கப்பட்டிருக் கின்றன? இன்னும் எத்தனை ஆயிரம் ஏக்கர் காணி அரசின் வசம் அல்லது முப்படை களின் வசம் இருக்கிறது என்பதை நாங் கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த நான்கரை வருட காலத்தில் மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதி பதியாக இருந்த போது மூன்று ஏக்கர், நான்கு ஏக்கர் என்ற அடிப்படையில் ஒரு சில தடவைகள் காணிகள் விடுவிக்கப் பட்டனவே தவிர ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்னும் முப்படைக ளின் வசம்தான் இருக்கின்றன.
இதேபோன்றே அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி னுடைய முயற்சிகளின் ஊடாக அரசால் விடுவிக்கப்பட்டதாக இல்லை. பல பேர் விடுவிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இருந்த அரசியல் கைதிகள் ஒன்றில் பிணையில் வெளி வந்திருக்கி றார்கள், இல்லாவிட்டால் அவர்களுக்குத் தண்டனை கிடைத்திருக்கிறது, இல்லாவிட்டால் அவர்களின் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. இப்போதும் 91 அரசியல் கைதிகள் சிறைகளில் இருக்கின்றார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில் நாங்கள் சில அரசியல் கைதிகளை விடுவித்து விட் டோம் என்பது ஒர் அப்பட்டமான பொய். கூச்சமே இல்லாமல் பொய் பேசுகிறார் சுமந்திரன். இதை நான் முன்பும் பல தடவைகள் கூறியிருக்கின்றேன்.
மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்சா ஆகியோரோடு சம்பந்தர் ஐயாவும் இருந்தபோது மூன்றிலிரண்டு பெரும் பான்மை அவர்களுக்கு இருந்தது. அப் படியிருந்தும் இவர்கள் எந்தவொரு விடத் தையும் சரி முற்று முழுதாக ஏதாவது ஒரு பிரச்சினையைத் தீர்த்தார்களா?
காணிப்பிரச்சினையைத் தீர்த்தார்களா? அரசு தர முடியாத விடயங்களை கூட நாங்கள் விட்டுவிடலாம். அதாவது மக்களிடம் இருந்து பிடுங்கப்பட்ட காணி கள் மீள கொடுக்கப்பட்டனவா? இல்லை என்றால் அரசியல் கைதிகள் இவர்களால் விடுவிக்கப்பட்டார்களா? காணாமல் ஆக் கப்பட்டோர் சம்பந்தமாக ஒரு அலுவலகம் திறக்கப்பட்டது அந்த அலுவலகம்கூட எந்தவிதமான உப்புச்சப்புமற்ற அதி காரமற்ற அலுவலகம். நாங்கள் போய் ஒரு முறைப்பாட்டை செய்தால் ஒருவரை காணவில்லை என்று அதனை தேடிப் பிடிக்கின்ற அதி காரம் அவர்களுக்குக் கிடையாது. அப் படியிருக்கும் போது மீண்டும் நாடாளு மன்றத்திற்குப் போய் என்ன செய்யப் போகிறீர்கள்? - என்று கேள்வி எழுப்பியுள்ளார்.