இறந்த சிரஞ்சீவி மற்றும் சுஷாந்த் நினைவாக நடிகை பிரணிதா செய்த விஷயம்: குவியும் பாராட்டு
இந்திய சினிமாத்துறையினரை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய விஷயம் சமீபத்தில் கன்னட நடிகர் சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் நடிகர் பிரசாந்த் சிங் ராஜ்புட் ஆகியோரின் மரணம் தான்.
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த சிரஞ்சீவி சார்ஜா, ஜூன் 7ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவருக்கு 39 வயது மட்டுமே ஆகிறது. சினிமா துறையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் கால் பதித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மரணம் தொடர்பாக மனைவி நடிகை மேக்னா ராஜ் சமீபத்தில் மிக உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். மேக்னா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், தன்னுடைய குழந்தையை கூட பார்க்காமல் சிரஞ்சீவி சர்ஜா மரணமடைந்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு வாரத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தன்னுடைய வீட்டில் தனிமையில் இருக்கும்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் மன அழுத்தம் காரணமாகத்தான் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது மரணம் தொடர்பான விசாரணை தற்போது மிகத் தீவிரமாக போலீஸார் நடத்தி வருகின்றனர்.
அவர்கள் இருவரின் நினைவாக 150 குடும்பங்களுக்கு உணவு மளிகை பொருட்கள் மற்றும் சானிட்டரி பேட்கள் உள்ளிட்டவற்றை விழிம்பு நிலையில் இருக்கும் ஆதரவற்ற ஏழை பெண்களுக்கு அவர் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது..
"கடவுள் வசம் சென்று விட்ட சிரு சார்ஜா மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஆகியோரின் நினைவாக நாங்கள் அறக்கட்டளை மூலமாக இன்று 150 ரேஷன் கிட்கள் மற்றும் சானிட்டரி பேட்கள் ஆகியவற்றை விளிம்பு நிலையில் இருக்கும் ஏழை பெண்களுக்கு வழங்கியுள்ளோம். அதில் பாலியல் தொழிலாளர்களும் உதவி வழங்கப்பட்டு உள்ளது (அவர்களது அடையாளத்தை வெளியிடாமல் இருக்க அவர்களது புகைப்படங்களை வெளியிடவில்லை). இது போன்று தேவதாசி மற்றும் சமுதாயத்தின் பிற வகுப்பினருக்கு முன்னேற்றத்திற்காக உதவி வரும் சுதா மூர்த்தி என்னுடைய வழிகாட்டியாக நினைக்கிறேன். அவரது காலடித் தடத்தை பின்பற்றி ஒரு சிறிய உதவி செய்துள்ளேன்" என பிரணிதா கூறியுள்ளார்.
இதுபோல தொடர்ந்து பலவிதமாக மக்களுக்கும் இந்த பேரிடர் சமயத்தில் உதவி வரும் பிரணிதாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.