வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் 6 ஆம் திகதி
இம்முறை தேர்தல் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை தேர்தல் தினத்திற்கு மறு தினம் அதாவது ஆகஸ்ட் 6 ஆம் திகதி முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று கண்டி மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல் முன்னெடுக்கப்படும் விதம் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.