ஆஸ்திரேலியா தனது எல்லையை அடுத்தாண்டு வரை மூட உள்ளது - சைமன் பிர்மின்காம்
அடுத்த ஆண்டு வரைக்கும் ஆஸ்திரேலியாவின் எல்லை மூடப்பட வாய்ப்பு என்று அந்நாட்டின் சுற்றுலாத் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நியூசிலாந்தில் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தற்போது வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எல்லைகளை கண்காணிக்க அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இதுவரை 7,370 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 102 பேர் உயிரிழந்தனர், 6,859 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பரவலை கிட்டத்தட்ட கட்டுப்படுத்தினாலும், அடுத்த ஆண்டுவரை எல்லையை திறக்க வாய்ப்பில்லை என்று ஆஸ்திரேலியா மந்திரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலியா சுற்றுலாத்துறை மந்திரி சைமன் பிர்மின்காம் கூறியதாவது:-
சுற்றுலா தொடர்பான ஆஸ்திரேலியாவுக்கு உள்ளே மற்றும் வெளியே பயணம் என்பது மிகவும் கவலையானது என்று நான் நினைக்கிறேன். கொரோனா வைரஸ் தொற்றை ஆஸ்திரேலியா வெல்வதற்கு நாட்டின் எல்லையை மூடியது ஒரு முக்கியமான காரணமாகும். விரைவில் பொது பயணத்திற்காக அது திறந்து விடப்படாது’’ என்றார்.
நீங்கள் கூறுவது பார்க்கும்போது அடுத்த ஆண்டு வரைக்கும் நாட்டின் எல்லை திறக்கப்படாது என்று எடுத்துக் கொள்ளலாமா? என்ற கேள்விக்கு, ‘‘அதற்கு அதிக வாய்ப்புள்ளதாக நினைக்கிறேன்’’என்றார்.
இதனால் டிசம்பர் 31-ந்திகதி வரை ஆஸ்திரேலியா வெளிநாட்டு நபர்களுக்காக எல்லையை திறக்காது என்பது புலப்படுகிறது.