தேர்தலில் வெற்றிப்பெறுவதோடு சிறிகொத்தாவின் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வேன் - சஜித்
பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் சகல குடும்பங்களுக்கும் 20,000 ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வீழ்த்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பும் வரை அந்த உதவித் தொகை வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
கம்பஹா பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் 154 பிரச்சார கூட்டங்களை நடத்தியதாகவும், இந்த முறை பொதுத் தேர்தலை முன்னிட்டு 1000 கூட்டங்களை நடத்த எதிர்பார்பதாகவும் அவர் கூறினார்.
அதற்கும் அதிகமாக பிரச்சார கூட்டங்களை நடத்தி காட்டுமாறு தான் ஏனைய போட்டியாளர்களுக்கு சவால் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வெற்றிப்பெறுவதோடு அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தின் மூலம் மக்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வது போல் சிறிகொத்தாவின் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.