முதன்முறையாக வடக்கிலிருந்து இலங்கை கிரிக்கெட் துடுப்பாட்ட சபை மத்தியஸ்தர் தெரிவு!
இலங்கை துடுப்பாட்ட சபையால்; யாழ்ப்பாணம் மாவட்ட கிரிக்கெற் மத்தியர் சங்கத்திலிருந்து ஒருவர் தரநிலை 3 இற்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த ரி.கிருபாகரன் என்ற யாழ்ப்பாணம் மாவட்ட கிரிக்கெட் மத்தியர் சபையின் முன்னிலை மத்தியஸ்தரே இவ்வாறு உள்வாங்கப்பட்டுள்ளார்.
இலங்கை துடுப்பாட்ட சபையின் மத்தியஸ்தர் தகுதி நிலை பிரிவு 3; பரீட்சையில் சித்தியடைந்த ரி. கிருபாகரன் யாழ்ப்பாணத்தின் கிரிக்கெட் மத்தியர்கள் சார்பில் நாட்டின் பிரபல பாடசாலைகள் பங்கேற்கும் அதிமுக்கிய போட்டிகளில் நடுவராக கடமையாற்றிவந்த நிலையில் தற்போது துடுப்பாட்ட மத்தியஸ்தர் சபையினால் பிரிவு 3 இற்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.
அத்துடன் வடக்கு கிழக்கு மாகணத்திலிருந்து முதன் முறையாக இலங்கை துடுப்பாட்ட மத்தியஸ்தர் சங்கத்திற்கு உள்வாங்கப்பட்ட முதலாவது கிரிக்கெட் மத்தியஸ்தர் என்ற பெருமையையும் தனதாக்கியுள்ளதுடன் யாழ்ப்பாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
பருத்தித்துறை தபலகத்தின் உத்தியோகத்தராக கடமையாற்றும் கிருபாகரன் யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராகவும் கடமையாற்றுவதுடன் இவ்வருடன் நடைபெற்ற வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்தியகல்லாரி மற்றும் பரியோவான்; கல்லூரிக்கிடையிலான போட்டியின் நடுவராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.