Breaking News

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமனம்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இடைக்கால நிர்வாக சபை இன்று காலை ஒன்று கூடியது, இதன் போது புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இதேவேளை கட்சியின் பிரதி தலைவராக அனுஷா சிவராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பதவி இதுவரை எவருக்கும் வழங்கப்படவில்லை என்பதோடு, மறைந்த ஆறுமுகன் தொண்டமானில் இழப்பினை ஈடுசெய்ய முடியாமையே இதற்கு காரணம் எனவும் கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.