நாடு முழுவதும் மஞ்சள் பற்றாக்குறை காரணமாக. மஞ்சள் மோசடி நடைபெறுகிறது!
மஞ்சள் அனைத்து நாடுகளாலும் உணவு மற்றும் மத மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த
படுகிறது.
உள்ளூர் விவசாயிகளைப் ஊக்குவிப்பதற்காக மஞ்சள் இறக்குமதி செய்ய அரசாங்கம் தடை விதித்திருந்தாலும், தற்பொழுது உள்ளூர் நுகர்வுத் தேவையை பூர்த்தி செய்ய உள்ளூர் மஞ்சள் உற்பத்திகள் போதுமானதாக இல்லை இதன் காரணமாக மஞ்சளிற்கு பெரும் தட்டுபாடு நிலவி வருகிறது.
பொதுவாக ஒரு கிலோ மஞ்சளின் சராசரி விலை ரூ .500 - 600 மஞ்சளின் இறக்குமதி தடை செய்யப்பட்ட பின்னர் மஞ்சளின் விலையானது ரூ. 2500 - 3000 வரை காணப்பட்டது, தற்போது மஞ்சள் ரூ .6,000 கூட சந்தையில் இல்லை.
இதன் காரணமாக தற்பொழுது நாடு முழுவதும் கோதுமை மா மற்றும் சோயா மாவுடன் கலந்த மஞ்சள் தூளை விற்பனை செய்வது வருகிறார்கள், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயங்களுடன் மறைத்து மஞ்சள் இறக்குமதி செய்வது போன்ற மோசடிகள் நடைபெற்று வருகிறது.