ஞானசார தேரருக்கு பொலிஸ் பாதுகாப்பு !
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் மூன்றாவது முறையாக நேற்று (19) சாட்சியம் அளித்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர் வழங்கியுள்ள சாட்சியத்திற்கு அமைய உயிர் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் உடனடியாக பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.