உலகளவில் கொரோனா நேயாளிகளின் எண்ணிக்கை 8 மில்லியனை கடந்துள்ளது!
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் (Johns Hopkins) பல்கலைக்கழகத்தின் அறிக்கைகள் 8 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய கோவிட் 19 நோய்த்தொற்றுகள் இருப்பதைக் காட்டுகின்றன.
இந்த அறிக்கைகளின்படி, 8,018,742 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 436,406 உலகளாவிய இறப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த வைரஸ் உலகளவில் பரவுகிறது மற்றும் சீனாவில் மீண்டும் பரவத் தொடங்கியது. பெய்ஜிங்கில் 100 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், பெய்ஜிங்கின் சின்ஃபாடி மொத்த சந்தையும் இப்போது மூடப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மொத்த சந்தையை மூடியதனால் நாட்டின் பிற பகுதிகளிற்கு நோய் தொற்று பரவுவதை நிறுத்த முடியும் என்று சீனா தேசிய சுகாதார சேவை கூறியுள்ளது.