தேர்தல்கள் ஆணைக்குழுவில் முக்கிய சந்திப்பு!
தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (30) முக்கிய சந்திப்பு ஒன்றுக்காக கூடவுள்ளது.
நாளை (30) காலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளது.
தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு ஒரு மணித்தியாலம் மேலதிகமாக வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை அது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை.