ஐரோப்பாவிற்குள் இலங்கையர் செல்வதற்க்கு தடை!
இலங்கை தன்னை கொரோனா அற்ற நாடு எனவும் கொரோனாவில் இருந்து விடுபட்டு விட்டதாகவும் தெரிவிக்கின்ற போதிலும் இலங்கையில் இருந்து வருபவர்களை அனுமதிக்க ஐரோப்பிய சங்கம் வாய்ப்பளிக்கவில்லை.
எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் சுமார் 54 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு ஐரோப்பாவிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாரிய அளவு கொரோனா நோயாளர்கள் காணப்படும் இந்தியாவை கூட குறித்து 54 நாடுகள் பட்டியலில் ஐரோப்பிய சங்கம் இணைத்துள்ளது.
எனினும் இலங்கை அந்த பட்டியலில் இல்லை என்பது விஷேட அம்சமாகும்.
பூட்டான், கோஸ்டரீகா, நமுபியா, ருவாண்டா டொமினிக் ராஜ்யம் கியூபா மொரிசியஸ் எத்தியோப்பியா போன்ற நாடுகள் இந்த பட்டியலில் இருக்கின்றபோதும் இலங்கைக்கு இடமளிக்கப்படவில்லை.