அரசாங்கத்தின் உத்தரவுகளை மீறி வங்கிகள் கிரெடிட் கார்டுகளுக்கு 28% வட்டி !
கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி 15% ஆகக் குறைக்க அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கும் அரசாங்கம் உத்தரவிட்டிருந்தாலும், பெரும்பாலான வங்கிகள் இன்னும் 28% வட்டியை பெறுகின்றன.
இதன் விளைவாக, நாட்டில் பலாயிரக்கணக்கான கிரெடிட் கார்டு பயனர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த வங்கிகளில் பெரும்பாலானவை சாதாரண சேமிப்புக் கணக்குகளுக்கு 3% முதல் 4% வரை வட்டி விகிதத்தை பராமரிப்பதால், வங்கிகள் மிகப்பெரிய லாபம் ஈட்டிக்கொள்கின்றன. இவர்கள் சாதாரன மக்களின் பணத்தை கொல்லையடிப்பதாகவே தெரிகிறது.
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய பல சலுகைகளை வங்கிகள் செயல்படுத்தவில்லை. இந்த ஒழுங்குமுறை அமைப்பை ஏற்றுக்கொள்ளாத வங்கிகளுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி அதன் நடவடிக்கை எடுக்க முடியும், வங்கிகளினுடைய உரிமங்களை நிறுத்தி வைக்கவும் முடியும். ஆனால் அவர்கள் இதற்க்கெதிராக எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கவில்லை.