Breaking News

உலகளவில் கொரோனா வைரசினால் 7.7 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிப்பு 430,000 பேர் வரையில் இறப்பு.

கடந்த டிசம்பரில் சீனாவில் ஆரம்பித்த கோவிட் -19 கொரோனா வைரசினால் இன்று வரை உலகளவில் குறைந்தது 430,289 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை  ஏ.எஃப்.பி உத்தியோகபூர்வ ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளது.

196 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் குறைந்தது 7,794,930 கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், 3,513,400 பேர்வரை இதிலிருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

 தேசிய அதிகாரிகளிடமிருந்து AFP சேகரித்த தரவுகளையும், உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவல்களையும் பயன்படுத்தி, தொற்றுநோய்களின் இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது .

பல நாடுகள் நோய் அறிகுறி அல்லது மிகக் கடுமையான நோயாளர்களை மட்டுமே சோதிக்கின்றன. 

அமெரிக்காவில் மட்டும் 2,074,526 கொரோனா நோய் வழக்குகளில் 115,436 பேர் உயிரிழந்ததுடன். 556,606 பேர் வரை நோயிலிருந்து குணமடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரேசில், 850,514 நோய்த்தொற்றுகளில் 
42,720 இறப்புகளுடனும்,  
இங்கிலாந்து 294,375 வழக்குகளில் 41,662 இறப்புகளுடன், 
இத்தாலி 236,651 வழக்குகளில் 34,301 இறப்புகளுடன் , 
பிரான்ஸ் 193,616 வழக்குகளில் 29,398 இறப்புகளுடன் உள்ளன. 

சீனா - ஹாங்காங்கை  தவிர - இன்றுவரை 4,634 இறப்புகள் மற்றும் 83,132 நோய்த்தொற்றுகள் 78,369 பேர் குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
பெய்ஜிங் ஃபுல்ஃபுட் சந்தையில் ஏற்பட்ட கொரோன தொற்று காரணமாக, ஏப்ரல் மாதத்திலிருந்து அதன் மிகப்பெரிய தினசரி அதிகரிப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை 57 புதிய நோய் தொற்று பதிவாகியுள்ளது. 

ஐரோப்பாவில் ஒட்டுமொத்தமாக 2,393,826 வழக்குகளில் இருந்து 187,550 இறப்புகளும், அமெரிக்கா மற்றும் கனடாவில் 2,172,934 நோய்த்தொற்றுகளிலிருந்து 123,599 இறப்புகளும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் 1,614,810  வழக்குகளில் இருந்து 78,293 இறப்புகளும், 
ஆசியாவில் 822,639 வழக்குகளில் 22,824 இறப்புகளும், , 
மத்திய கிழக்கு 548,026 வழக்குகளில் இருந்து 11,591 இறப்புகளும், 
ஆபிரிக்கா  233,992 வழக்குகளில் இருந்து 6,3026 இறப்புக்களும், 
மற்றும் ஓசியானியாவில் 8,710 வழக்குகளில் 131 இறப்புகளும் பதிவாகியுள்ளது.