மீண்டும் கொரோனா வைரஸின் பிடியில் சீனா !
சீனா பீஜிங்கில் 100 இற்கு மேற்பட்ட புதிய கொரோன வழக்குகள் பதிவாகியுள்ளதென அதிகார பூர்வமாக உலக சுகாதார அமைப்பு திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா. சுகாதார நிறுவனம் சீன தலைநகரில் இதுவரை புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், எனினும் தலைநகர் பெய்ஜிங்கில் இந்த நோய் தொற்று பரவியமை கவலையளிக்கிறது என்று WHO இன் COVID-19 தொழில்நுட்ப முன்னணி மரியா வான் கெர்கோவ் ஜெனீவாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
சீனா நகரத்தில் 50 நாட்களுக்கு மேலாக வழக்குகள் எதுவும் பதியப்படவில்லை. ஆனால்கடந்த வாரம், சீனா பெய்ஜிங்கில் நோய் தொற்று பரவல் காரணமாக, 100 க்கும் மேற்பட்ட புதிய வழக்குகள் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நோய் தொற்றுக்கான காரணங்களை சீனா அரசு தொடர்ந்து WHO உதவியுடன் ஆராய்ந்து வருகிறது .
சீன அதிகாரிகள் வைரஸ் பரவலை தடுப்பதற்காக அதிக அளவிலான அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்கள் எனவும், அதற்காக சீன அதிகாரிகளுக்கு WHO உதவி மற்றும் ஆதரவை வழங்கியுள்ளது என்றும் அதை மிக நெருக்கமாக கண்காணித்து வருகிறோம் என்று கூறினார்.