தபால் மூல வாக்கு சீட்டு விநியோகம் இன்று ஆரம்பம்!
தபால் வாக்கு சீட்டுகள் விநியோகம் மற்றும் தபாலிற்கு ஒப்படைக்கும் நடவடிக்கை இன்று (30) ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுதினமும் இந்த நடவடிக்கை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிக்க 7,753,037 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும் 7,705,085 பேரிற்கு மட்டுமே அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
47,430 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய ஏனைய செய்திகள் :