கட்சிகளின் சார்பிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் 6ஆம் திகதி
ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 40 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 7,451 பேர் போட்டியிடுவதாக தேர்தல் செயலகத்தின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரட்நாயக்க தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி அதாவது வாக்களிப்பு மறுதினம் இரவு அளவில் கட்சிகளுக்கு உரிய பாராளுமன்ற எறுப்பினர்களின் எண்ணிக்கையை அறிவிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் இன்று கூறினார்.