முழுமையான இராணுவ ஆட்சியே கோட்டாபய அரசால் அரங்கேற்றம் !
ஜனநாயக ஆட்சி, சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் ஆகிய இரண்டையுமே முற்றாக ஒழித்துக்கட்டிக் சர்வா திகார நிலைகொண்ட பூரண இராணுவ ஆட்சியை நோக்கிய பயணமாகவே தற்போதைய அரசின் முன்னேற்பாடுகள் காணப்படுகின்றன.
எனவே,இலங்கையில் மக்களை நேசிக் கக் கூடிய ஜனநாயக ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சியால் மாத் திரமே உறுதிப்படுத்த முடியும். - இவ்வாறு முன்னாள் பிரதம ரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார். நேற்று அவர் விடுத்துள்ள விசேட
அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:நாம் முன்னெடுத்த போராட்டத்தால் நாட்டில் ஜனநாயகம் மற்றும் மனித உரி மைகள் என்பன பாதுகாக்கப்பட்டுள்ளன. 2015ஆம் ஆண்டு இந்தப் போராட்டத்தை ஆரம்பித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசமைப்பு திருத்தம் மூலம் ஜனநாயக உரிமைகளை நாம் உறுதிப் படுத்தியுள்ளோம். தேர்தலை நடத்துவதற்கு ஆணைக் குழு இருக்கின்றது. முன்னாள் ஜனாதி பதியாக இருந்தாலும் அவரது செயற் பாடுகளைக்கூட இடைநிறுத்தக் கூடிய அதிகாரம் இந்த ஆணைக்குழுவுக்குக் காணப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி யால் இவற்றுக்குப் பாரிய சவால் ஏற் பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு வின் உறுப்பினரையும் தலைவரையும் பகிரங்கமாகத் தூற்றுகின்றனர். பொலிஸ் அதிகாரிகளுடன் செயற்பட இராணுவத்தினரை நியமிக்கின்றனர். பொலிஸார் புறந்தள்ளப்பட்டுள்ளனர். ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும் என்று கூறிய முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் அடித்துக் கொல்லப் பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை யின் சிரேஷ்ட அதிகாரியாக சேவையாற்றி யிருந்த ரஜீவ பிரகாஷ் ஜயவீர என்பவரின் சடலம் அண்மையில் சுதந்திர சதுக்கத் திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. அரச சேவை ஆணைக்குழுவின் நிலைமை யும் இது போலவே உள்ளது. அவர்களை மாற்ற முடியாத சந்தர்ப்பங்களில் இராணு வத்தினர் அழைக்கப்படுகின்றார்கள். அவர்கள் திணைக்களங்களின் பிரதா னிகளாக நியமிக்கப்படுகின்றனர். அவர்களிடமே முக்கிய பொறுப்புக்கள் அனைத்தும் ஒப்படைக்கப்படுகின்றன.
விசேட ஜனாதிபதி செயலணிகள் அமைக்கப்பட்டுள்ளன. எமது நாட்டிலுள்ள இராணுவத்தினர் உலகிலேயே சிறந்த வீரர்களாவர். போராட்டங்கள் மற்றும் அத னுடன் தொடர்புடைய செயற்பாடுக ளுக்கே அவர்கள் பொருத்தமானவர்கள். அவற்றுடன் தொடர்புடைய பொறுப்புக் களை அவர்களிடம் கையளிக்கலாம். இலங்கையின் நிர்வாக சேவையை போருக்கு அனுப்பினால் முடிவுகள் வேறு மாதிரியாக இருக்கும்.
யாழ்ப்பாணத்துக் குப் போருக்கு அனுப்பினால் அது காலி யிலேயே நிறைவுக்கு வரும். அதில்
திறமை இல்லை. ஆனால், நாட்டை நிர்வ கிப்பதற்கு பிரதேச செயலகங்கள், காணி களுடன் தொடர்புடைய விடயங்களைச் செய்வதற்குத் திறமை அத்தியாவசியமா னதாகும். இதனை இராணுவத்தினரால் செய்ய முடியாது. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உரிமைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணை வோம் - என்றுள்ளது.