இலங்கையில் முதல்முறையாக நீருக்கடியில் அருங்காட்சியகம் !
இலங்கையில் முதல்முறையாக நீருக்கடியில் சுமார் 50 அடி ஆழத்தில்அமைக்கப்பட்ட அருங்காட்சியகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படையின் உதவியுடன் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளதாக கடற்படை குறிப்பிடுகின்றது.
இலங்கையின் தென் பகுதியிலுள்ள மிக அழகான கடற்கரைகளில் ஒன்றான காலி கடற்கரையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அருங்காட்சியகத்திலுள்ள அனைத்து நிறுவல்களும் இலங்கை கடற்படை வீரர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
சிமெண்ட் மற்றும் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களை கொண்டு இந்த அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.