Breaking News

ஒரு நாடு இரு தேசம் என்பது வெற்றுக் கோசமா? அர்த்தமுள்ள கோட்பாடா?

அண்மைய நாட்களில் தமிழ் மக்களது அரசியல் பெருவெளியில் ஒரு நாடு இரு தேசம் “Two Nations - One Country” என்கின்ற கருத்தியல் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ‘அர்த்தமுள்ள அரசியல் பரவலாக்கம்’ என்ற நிலைப்பாட்டிற்கு மாற்று நிலைப்பாடாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ‘ ஒரு நாடு இரு தேசம்’ என்பதனை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். ஆயினும் அண்மைக் காலம் வரை இந்த அரசியல் நிலைப்பாடு பெருமளவிலான கருத்தியல் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கவில்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் நிலவிய அகப்புறச் சூழ்நிலைகளும் அன்று நிலவிய ஒரு இறுக்கமான அரசியல் சூழ்நிலையூம் இக்கருத்தியல் மக்கள் முக்கியத்துவப்படுத்தாதற்கான காரணமாக அமைந்திருந்தன எனலாம். தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான அரசியல் சூழ்நிலைகள் ஒப்பீட்டளவிலான கருத்து நிலைச் சுதந்திரத்தால் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் இதுபோன்ற பல்வேறு கலந்துரையாடல்களையூம் கருத்துருவாக்கங்களையூம் மேற்கொள்ளக் கூடிய ஓர் சூழ்நிலை உருப்பெற்று வருகிறது.

இந்நிலையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்இ எமது பிரச்சினை ஒரு நாடு இரு தேசம் என்கின்ற அடிப்படையில் அணுகப்பட வேண்டும் எனக் கருத்து வெளியிட்டிருந்தார். முதலமைச்சரின் இருக்கருத்தானது இவ்வெண்ணக்கரு தொடர்பிலான ஒரு பரந்த கவனத்தை ஈர்த்ததுடன் மையவிவாதப் பொருளாகப் பரிணமிக்கக் கூடிய முக்கியத்துவத்தைப் பெற ஆரம்பித்தது. எவ்வாறெனினும் தமிழரசுக் கட்சியின் உயர் தலைமைப் பீடத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறான ஓர் கருத்து நிலை தமிழ் மக்கள் மத்தியில் மீள் உருவாக்கம் பெறுவதை விரும்பாத போக்கும் அது தமது அரசியல் நிலைப்பாடான அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கம் என்பதைப் பாதிக்கும் என அர்த்தம் கொள்கின்ற போக்கும் வெளிப்பட ஆரம்பித்துள்ளது. இதன் ஓர் அங்கமாக திருகோணமலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தமிழரசுக் கட்சியினர்இ ஒரு நாடு இரு தேசம் என்பது ஓர் வெற்றுக் கோசம் எனச் சாடியதுடன் அது நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒன்று என விமர்சித்திருந்தனர்.


ஒரு நாடு இரு தேசம் என்பது இன்று நேற்று உருவான கருத்தியல் அல்ல. தமிழரசுக் கட்சியினரது தோற்றத்திற்கு வழிவகுத்ததே இக்கருத்தியல்தான். 1949 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18 ஆம் திகதி மருதானையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் முதலாவது கூட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றிய எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ஒரு நாடு இரு தேசம் என்ற கருத்தியலை முன்வைத்தே உரையினை நிகழ்த்தினார். அதில் இலங்கை ஏன் இரு தேசத்தின் ஒருங்கிணைப்பாகக் கருதப்பட வேண்டும் என்பதனையூம் தமிழ் பேசும் மக்கள் ஏன் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதனையூம் காரணங்களோடு தௌpவாகக் கூறியிருந்தார். தந்தை செல்வாவின் இழப்பிற்குப் பின்னர் தமிழரசுக் கட்சியை வழிநடத்திய அமிர்தலிங்கம் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் கொண்டு வர முற்பட்ட வேளையில் பாராளுமன்றத்தில் ஒரு பிரசித்தி வாய்ந்த உரையினை நிகழ்த்தியிருந்தார்.

அதில் கூட ஏன் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது பற்றி நீண்டதொரு விளக்கம் அளித்திருந்தார். தொடர்ந்து வந்த விடுதலைப் புலிகளின் காலத்தில் கூட ஒரு நாடு இரு தேசம் மற்றும் உள்ளக சுயநிர்ணயம் போன்ற கருத்தியலை முன்வைத்திரந்தனர். தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தமது அரசியல் நிலைப்பாடாக ஒரு நாடு இரு தேசம் என்பதனை முன்வைத்து வருகின்றனர். ஆக தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கருத்து நிலை அண்மையில் உருவானதொன்றல்ல. இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான தமிழ் அரசியல் வெளியில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த ஒரு கருத்தியல் ஆகும். எனவே இதனை ஒரு வெற்றுக் கோசம் என ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. குறிப்பாக தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் இந்தக் கருத்து நிலை உருவாக்கத்தை முதலில் செய்தவர்களே அவர்கள்தான். எனவே அவர்கள் இதனை ஒரு வெற்றுக் கோசம் என இலகுவில் மறுதலித்துவிட முடியாது. அப்படி அவர்கள் செய்வார்களாயின் தந்தை செல்வநாயகமும் அமிர்தலிங்கமும் தமிழரசுக் கட்சியின் ஏனைய சிரேஷ்ட தலைவர்களும் அன்று செய்தது வெற்றுக் கோசம் என்றாகிவிடும்.

இந்நிலையில் உங்களிடம் இயல்பான கேள்வி ஒன்று எழலாம். தேசம் என்பதையூம் நாடு என்பதையூம் ஒரே அர்த்தத்துடன் அன்றாடம் பயன்படுத்தி வரும் நிலையில் இவை இரண்டிற்குமிடையிலான கருத்து நிலை வேறுபாடு என்ன? என்பதே அதுவாகும். தேசம் என்ற வார்த்தையூம் நாடு என்கின்ற வார்த்தையூம் மாறி மாறி பயன்படுத்தி வந்தாலும் இவை இரண்டிற்கும் இடையில் கருத்தியல் வேறுபாடு உள்ளது. ஒரு நாடு என்பது சர்வதேச எல்லைகளைக் கொண்ட சட்ட ரீதியான ஓர் புவியியல் நிலப்பரப்பு எனலாத். இவை மற்றைய நாடுகளுடனான சர்வதேச உறவூகளையூம் ஏற்றுமதி இறக்குமதிகளைக் கொண்ட சர்வதேச வர்த்தகங்களையூம் கொண்டிருக்கும் சட்டரீதியான அங்கீகாரம் பெற்ற ஒன்றாகும். உலகில் ஏறத்தாழ 190 நாடுகள் காணப்படுகின்றன.

தேசம் என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வரைவிலணக்கணங்கள் காணப்பட்டாலும் கூட பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வரைவிணக்கணத்தின்படி ஒரு இனம் தனக்கென தனியாக மொழிஇ கலாசாரம்இ பண்பாடுஇ பாரம்பரியம் மற்றும் வேறுபடுத்திக் காட்டக் கூடிய தனியான வரலாறு என்பவற்றைக் கொண்டிருப்பதுடன் குறித்த ஓர் நிலப் பகுதியில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருவார்கள் ஆயின் அவர்களை ‘தேசம்’ (Nation) என அங்கீகரிக்க முடியூம். இங்குள்ள மயக்க நிலை என்னவென்றால் தேசம் (Nation) என்பதைத் தனி நாடு என பலர் தவறாக அர்த்தப்படுத்திக் கொள்வதுண்டு. தேசம் என்பது தனி நாடல்ல. தேசம் என்பது மேற்கூறப்பட்ட பண்புகளைக் கொண்ட ஓர் தேசய இனத்திற்கான அரசியல் அங்கீகாரம் மட்டுமே.

தேசம் என்கின்ற அரசியல் அங்கீகாரத்துக்கான முக்கியத்துவம் என்ன? ஏன் இந்த அரசியல் அங்கீகாரம் வேண்டும்? எனக் கேட்டால் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்பட்ட இனம் தனது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைகளை முன்வைக்க முடியூம். ஆக தமிழர்கள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமது அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் தமிழ் மக்கள் ஓர் தேசமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அவ்வாறான அங்கீகாரம் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கான அடிப்படயாக அமையூம். மாறாக இலங்கை என்கின்ற ஓர் நாட்டுக்குள் தமிழ் மக்கள் வெறும் சிறுபான்மையினர் மாத்திரமே என்பதை ஏற்றுக் கொண்டு 13 ஆவது திருத்தச் சட்டம் போன்றதோர் அதிகாரப் பரவலாக்கத்தைப் பெற்றுக் கொள்வதாக இருந்தால் தமிழர்களுக்கு தேசம் என்கின்ற அங்கீகாரம் தேவையில்லை. ‘அர்த்தம் உள்ள அதிகாரப் பரவலாக்கம்’ என்கின்ற நிலைப்பாடே போதுமானதாகும்.

ஆக நாம் எங்கே சென்றடையப் போகின்றோம், அல்லது தமிழ் மக்களுக்கு எத்தகைய தீர்வூ அவசியமானது என்பதை அடிப்படையாகக் கொண்டே ‘ஒரு நாடு இரு தேசம்’ என்பது வெற்றுக் கோசமா? அல்லது அர்த்தமுள்ள கோட்பாடா என்பதைத் தீர்மானிக்கும்.

(சதுர்வேதி- ஞாயிறு தினக்குரல் (24/05/2015)