பளை துப்பாக்கி சூடு - உயிரிழந்தவரின் உறவினர்கள் கண்டி நெடுஞ்சாலையை (A9) மறித்து போராட்டம் !
விசேட அதிரடிபடையினரின் (STF) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 24 வயதுடைய இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (சனிக்கிழமை) மாலை 6.15 மணியளவில் முகமாலையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக மணல் ஏற்றச் சென்றதாக நம்பப்படும் உழவு இயந்திரத்தின் மீது அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டிலேயே இளைஞன் கொல்லப்பட்டுள்ளார்.
உழவு இயந்திரத்தின் பின்பெட்டியில் நான்கு இளைஞர்கள் இருந்தனர் எனவும் இதில் கெற்பெலியை சேர்ந்த திரவியம் இராமகிருஸ்ணன் (24) என்ற இளைஞனின் தலையில் துப்பாக்கிச்சூடு பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சடலம் பளை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் கண்டி நெடுஞ்சாலையை (A9) மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.