சிங்கப்பூரில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது !
சிங்கப்பூரில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஜுலை தேர்தல்- தேர்தல்துறை .
ஜனாதிபதி ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியென் லூங்கின் ஆலோசனைப்படி நாடாளுமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியென் லூங்கின் ஆலோசனைப்படி நாடாளுமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து இந்த மாதம் 30ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தினம் என்று அறிவிக்கப்பட்டது.
பொதுத்தேர்தல் ஜூலை 10ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று தேர்தல் துறை அறிவித்துள்ளது.
இன்று மாலை சிங்கப்பூர் நேரப்படி 4 மணிக்கு மக்களிடையே தொலைக்காட்சி வழியாக உரையாற்றிய, பிரதமர் லீ சியன் லூங், கோவிட் -19 நிலைமை ஓரளவுக்கு நிலைத்தன்மையை எட்டியுள்ளதால் பொதுத் தேர்தலை இப்போது நடத்த முடிவு செய்ததாகக் குறிப்பிட்டார்.
தேர்தலுக்குப் பிறகு, கொரோனா கிருமித்தொற்றைக் கையாளுதல், நாட்டின் பொருளாதார வேலைகள் போன்றவற்றை உள்ளடக்கிய தேச முன்னேற்றம் தொடர்பான அம்சங்களில் புதிய அரசாங்கம் கவனம் செலுத்த முடியும் என்றும் அதன் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய கடினமான முடிவுகளையும் மேற்கொள்ள முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.