உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
சஹ்ரான் மற்றும் தௌஹீத் ஜமாஅத் அமைப்பினர் காத்தான்குடியில் அட்டகாசம் செய்கின்றனர் என்று சஹ்லான் மௌலவி 2017ஆம் ஆண்டில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முறைப்பாடு ஒன்றினை கொடுத்தவுடன் குற்றப்புலனாய்வு பிரிவுக்கும் முறைப்பாடு செய்துள்ளார்.
இரண்டு வருடங்களாக குற்றப்புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வி உள்ளது என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சமல் திலிப பீரிஸ் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித் துள்ளாா்.

அத்துடன் இது குறித்து நாம் பொலிஸ் மா அதிபருக்கு தெரிவித்து அவர் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வி சட்டமா அதிபர் திணைக்களம் பக்கம் உள்ளது. ரி.ஐ.ரி. யினால் எமக்கு அனுப்பி ஆலோசனை வழங்கக்கோரிய கோப்புகளில் ஆதாரங்கள் இல்லாது ஆலோசனை வழங்க முடியாதெனத் தெரி வித்துள்ளாா்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நேற்று வியாழக்கிழமை பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது. இதில் சாட்சியமளிக்க வந்திருந்தபோதே அவர் இவற்றை குறிப்பிட்டார். அவர் வழங்கிய சாட்சியத்தின் விபரம் வருமாறு
குழு :- தெரிவுக்குழு முன்னிலையில் நீங்கள் சில காரணிகளை கூற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தீர்கள். அதற்கமையவே உங்களை அழைத்துள் ளோம். ஆகவே நீங்கள் கூறவேண்டிய விடயங்களை இப்போது முன்வைக்க முடியும்.
திலிப பீரிஸ் :- சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்று குறித்து இந்த குழு முன்னிலையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதாவது குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடந்த 2017ஆம் ஆண்டு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. பொறுப்புள்ள திணைக்களமாக நாம் அரச அதிகாரிகள் அரச சேவையினை தெரிவு செய்துள்ளோம்.
எமது கௌரவமும் திணைக்கள தரமும் எமக்கு முதன்மையானவையாகும். பொருளாதார நோக்கங்கள் எமக்கு முக்கியம் இல்லை. எவருக்கும் கட்டுப்படாத வகையில் செயற்படவே நாம் நினைகின்றோம்.
எனினும் எமது நிறுவன அதிகாரி ஒருவருக்கு அவப்பெயர் வரும் என்றால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்கமைய தெரிவுக்குழு முன்னிலையில் நாம் வர கோரிக்கை விடுத்தோம். கடந்த காலத்தில் பேசப்பட்ட குறித்த கோப்பையும் நான் கொண்டுவந்துள்ளேன்.
அரச அதிகாரி அல்லது சட்டமா அதிபர் சுயாதீனமாக ஆலோசனைகளை வழங்க முடியும். அதற்கமைய சட்டவறிஞர்கள் பொலிஸ் அதிகாரிகளின் மனுக்கள் வருகின்றன. இது குறித்து நீதிமன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதில் குற்றமானது சாதாரண சந்தேகத்துக்கு அப்பால் உறுதிப்படுத்த முடிந்த ஆதாரங்களை கொண்டே தீர்மானம் எடுக்கப்படும். சட்டமா அதிபர் திணைக்களத்தில் குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகள் குறித்த பிரிவுகள் உள்ளன.
இதில் போதைப்பொருள் விவகாரங்கள் குறித்தும் சிறுவர் துஸ்பிரயோகம், பயங்கரவாத செயற்பாடுகள் குறித்து பிரிவுகளாக செயற்படும் அதிகாரிகள் உள்ளனர்.
இதில் பயங்கரவாத காரணியொன்று வருமென்றால் அது ஆசாத் நவாவியின் பிரிவுக்கு செல்லும். இவை குறித்து இறுதியாக சட்டமா அதிபருடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும். எம்.பி என்ற பிரிவு ஒன்று உள்ளது. இது நேரடியாக சட்டமா அதிபரின் கீழ் மக்களின் குறைகளில் ஆராயும் பிரிவாகும்.
அவ்வாறு இருக்கையில் 2017 ஆம் ஆண்டு முஸ்லிம் அமைப்பொன்றின் மூலமாக சட்டமா அதிபருக்கு கோப்பு ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது. சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரியவின் பெயருக்கே வந்துள்ளது.
நீதி அமைச்சர், பொலிஸ்மா அதிபர் அற்றும் அரச அதிகாரிகள் சிலருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பின்னர் நவாவிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்துடன் ஒப்பிட்டு பார்த்தேன். இதில் அனுப்பிவைக்கப்பட்ட நபர் மீண்டும் அதே கடிதத்தை சில மாற்றங்களை செய்து அனுப்பி வைத்துள்ளார் என்றே தெரிகின்றது.
இந்த கடிதம் குறித்து சட்டமா அதிபருடன் பேச முன்னர் முதலில் இந்த கடிதத்தை நான் படித்தேன். இதில் முதல் வாக்கியம் " நாம் முஸ்லிம் சமூகத்தினர் " என்ற காரணிகளுடன் ஆரம்பித்துள்ளது. இரண்டாம் வாக்கியத்தில் இஸ்லாம் என்றால் என்ன என்ற காரணிகளை முன்வைதுள்ளார்.
இறுதியாக இந்த நாட்டின் அமைதி நல்லிணக்கத்தை நாசமாக்க எந்த அமைப்புகளுக்கும் அனுமதிக்க முடியாது. எனினும் சில இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் காத்தான்குடியில் உருவாகி வருகின்றது என்று கூறி சில காரணிகளை முன்வைத்துள்ளார்.
இதில் இருந்து எனக்கு என்ன விளங்கியது என்றால், என்.டி.ஜே என்ற அமைப்பு அதாவது தேசிய தொவ்ஹித் ஜமாஅத் மற்றும் சஹரான் என்ற அவ்வமைப்பின் தலைவரின் மூலம் உருவாக்கப்பட்டு, அங்கு மக்கள் குழப்பமடைந்துள்ளதாகவும் அதனை தீர்த்து தாருங்கள் என்றுமே அதில் கூறப்பட்டுள்ளதாக நான் கருதினேன்.
இந்த கடிதத்துடன் சில புகைப்படங்களும் இணைக்கப்பட்டன. இதில் குறிப்பிட்ட சில படங்களை நான் அவதானித்தேன். இதில் நடுவீதியில் வாள்களுடன் சிலர் இருப்பதும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் இருந்தது.
கேள்வி :- இந்த புகைப்படங்களில் எதனையும் அடையாளப்படுத்த முடியுமா ?
பதில் :- இதில் ஒரு நபர் அணிந்துள்ள டி-ஷர்ட் இல் வெள்ளை நிற அடையாளம் ஒன்று உள்ளது. இது ஐ. எஸ் அமைப்பின் சின்னத்துக்கு ஒப்பான ஒன்றாகும். மற்றையதில் சஹரான் என்ற நபர் இருப்பதும் உள்ளது.
எனினும் இந்த மௌலவி காத்தான்குடியில் இருந்து இங்கு வந்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு தனது கைகளால் இந்த கடிதத்தை வழங்க முக்கியத்துவம் இருக்க வேண்டும். அதற்கு எமது முக்கியத்துவமும் கொடுக்கப்பட வேண்டும். ஆகவே நான் சட்டமா அதிபருடன் பேசினேன்.
சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரியவிடம் இந்த காரணிகளை கூறியவுடன் அவரும் ஆச்சரியமடைந்தார். இலங்கையில் இவ்வாறு இடம்பெறுகின்றதா என கேள்வி எழுப்பினார். இதற்கு பிரதேச பொலிஸாரை பயன்படுத்தி சரிவராது பிரதான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கூறினார்.
கேள்வி :- அந்த மௌலவியின் பெயர் என்ன ?
பதில் :- சஹ்ரான், இந்த கடிதத்தில் அவர் கூறிய விடயங்களை நான் சட்டமா அதிபருக்கு கூறினேன். அதனை வாசித்துக் காட்டினேன். அதற்கமைய அவர் விசாரணை அறிக்கைகளை பெற்றுத்தரும்படி கேட்டுக்கொண்டார்.
சாதாரணமாக எமக்கு வரும் கடிதத்தின் பிரதி ஒன்றை பொலிஸ்மா அதிபருக்கு அனுப்புவோம். ஆனால் இம்முறை நான் அவ்வாறு செய்யாது சஹ்லான் மௌலவியின் கடிதத்தின் பிரதியுடன் சட்டமா அதிபரின் கோரிக்கையை உள்ளடக்கி அனுப்பினேன்.
பொலிஸ்மா அதிபருக்கு விசாரணை நடத்தி அறிக்கையை தரவேண்டும் என நான் 2017 ஆம் ஆண்டு அனுப்பினேன். சில காலங்களின் பின்னர் 2017. 7. 21 ஆம திகதி மீண்டும் சஹாலான் மௌலவி சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பினார். அதாவது முதலில் அவர் அனுப்பிய கடிதம் குறித்து கலந்துரையாடல் ஒன்றினை ஏற்படுத்தி தருமாறு அவர் கோரியிருந்தார்.
கலந்துரையாடலை ஏற்படுத்தும் அதிகாரம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் இந்த கடிதம் குறித்து நான் சற்று அவதானம் செலுத்தியிருந்தேன். இரண்டாவது கடிதம் கிடைத்தவுடன் மீண்டும் கடிதம் ஒன்றினை அவருக்கு அனுப்பினேன்.
அதில் பொலிஸ்மா அதிபருக்கு நாம் உரிய காரணிகளை கொடுத்துள்ளதாக நான் சுட்டிக்காட்டியிருந்தேன். மீண்டும் சஹலான் மௌலவி கடிதம் ஒன்றினை அனுப்பினார். அதில் எமது முயற்சிகளுக்கு நன்றிகளை கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
கேள்வி :- எப்போது இந்த கடிதம் வந்தது பதில் :- 17.09.04 இந்த கடிதம் வந்தது. எனது கண்காணிப்பு அதிகாரியின் பதிவேட்டில் சஹலான் மௌலவி தொடர்புகொண்ட இலக்கத்தை பதிவு செய்திருந்தேன்.
சஹரான் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு பிணை வழங்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன அதனை தடுக்க வேண்டும் என கூறினார். அதற்கமைய காத்தான்குடி பிரதி பொலிஸ்மா அதிபருக்கு என்னை சந்திக்க தகவல் அனுப்பினேன்.
கஸ்தூரி ரத்ன என்ற நபர் என்னை வந்து சந்தித்தார். அவர் முழுமையான அறிக்கை ஒன்றினை என்னிடம் ஒப்படைத்தார். முழு சம்பவமும் அதில் இருந்தது. தேசிய தவ்ஹித் ஜமாஅத் அமைப்பிற்கும் எமக்கு கடிதம் அனுப்பிய அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புமே மோதல்களில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிந்தது.
பின்னர் இந்த நபர்களுக்கு பிணை வழங்க வேண்டாம் எனவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினேன். சஹ்ரான் மௌலவிக்கு மீண்டும் நான் அறியப்படுதினேன். நீங்கள் கோரிய காரணி குறித்து நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கியுள்ளேன்.
இது குறித்து மேலதிக தகவல்கள கிடைத்தால் காத்தான்குடி போலிஸ் நிலையத்தில் கூறுமாறும் கடிதத்தில் அனுப்பினேன். அதன் பின்னர் மௌலவி எனக்கு கடிதம் அனுப்பவில்லை. ஆனால் மௌலவி அனுப்பிய கடிதங்களுக்கு நான் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த கோரிக்கைக்கு இன்றுவரை எமக்கு எந்த பதிலும் வரவில்லை.
அதேநேரம் இந்த விடயத்தின் பாரதூரத்தை சட்டமா அதிபர் அவதானித்தார். யார் என்ன விடயம் என்றெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் நான் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி இருந்தேன். இந்த விடயங்களை குறித்து விசாரணைகள் நடப்பதை அறிந்தேன்.
கேள்வி :- எப்போது அறிந்தீர்கள்?
பதில் :- தாக்குதலுக்கு பின்னர் அறிந்தேன். நவாவியை சந்தித்த பின்னர் உங்களின் மத மௌலவி ஒருவர் கடிதம் அனுப்புகின்றார் அது குறித்து சற்று ஆராய்ந்து பாருங்கள் என நான் கூறினேன்.
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு குறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த கடிதத்தின் சாராம்சம். இது குறித்த மேலதிக தகவல்கள், விசாரணைகள் குறித்து எனக்கு தெரியாது.
இது குறித்து பொலிஸ்மா அதிபருக்கு நான் கூறியும் அவர் விசாரணைகளை நடதியிருதால் அதனை எனக்கு கடிதம் மூலமாக தெரிவித்திருக்க முடியும். ஆனால் இன்றுவரை எந்த கடிதமும் வரவில்லை.
முதலில் முறையிட்ட மௌலவி எம்மிடம் கடிதம் கொடுத்த அன்றே குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவிடமும் கொடுத்துள்ளார். ஆனால் அவரிடம் வாக்கமூலம் பெற இரண்டு ஆண்டுகள் சென்றுள்ளது.
கேள்வி :- இரண்டு ஆண்டுகள் என்றால் எப்போது பதிவாகியது ?
பதில் :- இந்த சம்பவம் தெரிய வந்தவுடன் குற்ற விசாரணை பிரிவு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. 2019.05.05 திகதி வந்துள்ளது.சஹரான் மௌலவி மற்றும் சிலர் நாட்டின் ஐக்கியத்தை அழிக்கும் விதத்தில் செயற்பட்டு வருவதாக 2017 ஆம் ஆண்டு சஹலான் மௌலவி ஆதரங்களுடன் ஒப்படைத்தார் என கூறியுள்ளது.
எமக்கு உள்ள பிரச்சினை என்வென்றால் மௌலவி கொடுத்த கடிதம் தொடர் பில் நாம் சகல நடவடிக்கையும் எடுத்தோம். அவர் இந்த தாக்குதல் குறித்து தூரநோக்குடன் சிந்தித்து இந்த கடிதத்தை எம்மிடம் கொடுத்துள்ள நிலையில் அதற்கான நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே எமது கேள்வி.
குழு :- நாம் இது குறித்து பலதரப்பட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம். நீங்கள் இன்று கூறும் விடயங்கள் என்பன எவ்வாறு இருந்தாலும் இந்த முறைப்பாடு கடிதம் மூலமாக ரி.ஐ.ரி. க்கு வந்த குற்றங்கள் குறித்து சட்டமா அதிபருக்கு எழுதப்பட்டது. நீங்கள் கூறிய காரணிகளுடன் நான் இணங்குகிறேன்.
இங்கு சாட்சியங்கள் முழுமையாக ஊடகங்களில் பதிவு செய்யவில்லை. எமது விசாரணைகளில் சரியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சாட்சி :- இது எமது திணைக்களம். நவாவியும் நானும் ஒரே சார்பான ஊழியர்கள். அர்ப்பணிப்புடன் நாம் இதனை செய்து வருகின்றோம். பல அழுத்தங்களின் மத்தியில் நாம் செயற்பட்டு வருகின்றோம்.
சில முக்கிய வழக்குகளை நாம் இன்றும் முன்னெடுத்து வருகிறோம். சர்ச்சைக்குரிய சில வழக்குகளை நான் செய்து வருகின்றேன். இது எமது தனிப்பட்ட வாழ்க்கையை பணயம் வைத்தே செய்து வருகின்றோம்.
அவ்வாறு இருக்கையில் இவ்வாறான ஒரு விடயத்தில் எம்மை அவமதிப்பது தவறானது. இந்த கடிதம் குறித்து பொலிஸ்மா அதிபருக்கு தெரிவித்து ஆராய வேண்டும் என்று கூறியுள்ளேன்.
எமக்கு அனுப்பிய ஆலோசனை கோப்பில் முகப்புத்தக கணக்கின் புகைப்படங்கள், மற்றும் இரண்டாவது கோப்பில் அதே போன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சஹரான் பயங்கரவாதி என்றால் எம்மிடம் ஏன் கேட்க வேண்டும், முதலில் கைது செய்திருக்க வேண்டும்.
எம்மை பார்த்துகொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இறுதியாக அனுப்பிய மூன்றாவது கோப்பில் பயங்கரவாத விசாரணை பிரிவு விசாரணை நடத்தி அனுப்பி வைத்துள்ள காரணியில் மிகவும் மோசமாக நகைப்புக்குரிய காரணிகளே இருந்தது.
சரியாக குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியாத நிலையில் எவ்வாறு நாம் நடவடிக்கை எடுக்க முடியும்.
சுமந்திரன் :- சற்று அமைதியாக கேளுங்கள், நீங்கள் ஆரம்பம் முதலே சரியாக காரணிகளை கூறினீர்கள். இந்த தகவல்கள் போதவில்லை என்றால் வேறு தகவல்களை பெற்றிருக்க முடியும். சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் சென்று சாட்சியமளிக்க கூறவில்லை,
ஜெயம்பதி :- நீங்கள் முன்வைத்த அறிக்கையில் வேறு காரணிகள் இருக்கின்றதா ?
பதில் :- இதில் பாரதூரமான விடயம் உள்ளது. இவ்வாறு கடிததலைப்புகளில் கோரிக்கை விடுத்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். முகப்புத்தகங்களை பார்த்து செயற்பட வேண்டிய அவசியம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு இல்லை.
இவர்கள் செயற்பாட்டில் இருக்க வேண்டும். காத்தான்குடி ஓ.ஐ.சியை நான் வரவழைக்க நேரடியாக கூறவில்லை. உயர் அதிகாரிகளின் மூலமாகவே அழைப்பு விடுத்தேன். அவர் வந்தவுடன் ,குறித்த புகைப்படங்களை காட்டி னேன். காத்தான்குடியில் இவ்வாறு மோசமாக நடந்துள்ள நிலையில் பொலிஸ் வேடிக்கை பார்க்கிறீர்களா என கேட்டேன்.
கேள்வி :- அவர் என்ன பதில் கூறினார் ? பதில் :- அவற்றை இதில் கூறுவது முறையில்லையே கேள்வி :- இல்லை நீங்கள் கூறுங்கள் என்ன கூறினார் அவர் ?
பதில் :- அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக செய்ய முடியாது என்றார். என்றாலும் அரசியல் செயற்பாடுகளுக்காக பொதுமக்களை துன்புறுத்த இடமளிப்பதா என்ற கேள்வியே எம்மிடம் இருந்தது.
கேள்வி :- நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசுகின்றீர்கள். ஆனால் உங்களின் காரணிகளை நீங்கள் கூறுகின்றீர்கள். அது நல்ல விடயம். நாம் குழுவாக இதில் இணைந்து செயற்பட வேண்டும். யாரையும் நாம் குற்றம் சுமத்த இங்கு செயற்படவில்லை.
இங்கு நாம் குறைபாடுகள் என்ன என்பதையே ஆராய்கின்றோம். உங்களின் திணைக்களத்தில் வெவ்வேறு மூன்று கடிதங்கள் உள்ளன. இதில் அதிகாரிகள் மட்ட பிரச்சினைகள் இல்லை. தொடர்பாடல் பிரச்சினையே உள்ளது. தொடர்பாடல்களில் சிக்கல் இருப்பதாக நீங்கள் அறிந்திருன்தீர்களா ? வெவ்வேறு அதிகாரிகள் இருக்கின்ற நிலையில் குறைபாடுகள் இருந்ததா ?
பதில் :- உண்மையில் இதற்கு விசாரணை ஆணைக்குழுவுடன் உள்ள தொடர்பின்மையே காரணமாகும். இந்த செயற்பாட்டில் டி.ஐ.டி ஒரு கட்டத்தில் மௌனமாக இருந்தது. ஆனால் பொலிஸ்மா அதிபர் அதிகாரங்களை கொண்டு வலியிறுத்தியிருக்க முடியும்.
இதில் பிரச்சினை இருப்பதாக நாம் உணர்ந்தோம். குண்டு வெடிப்பு இடம்பெற்றவுடன் இந்த உணர்வு வந்தது. பொலிஸ்மா அதிபர் சற்று அக்கறை செலுத்திருந்தால் இந்த தாக்குதலை தடுத்திருக்க முடியும் என்றே எண்ணம் எமக்கு வந்தது. ஏதாவது ஒரு பிரச்சினை வந்தவுடன் சட்டமா அதிபர் திணைக்களத்தை சாட்டி நாம் பதில் வழங்கவில்லை என கூறிவிடுகின்றனர்.
கேள்வி :- எப்போது மக்கள் குறைகேள் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது?
பதில் :- 15 வருடங்களாக இருக்கும்
கேள்வி :- சஹலான் கடிதம் மூலமும் தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டுள்ளார் என்பதை நீங்களே கூறுகின்றீர்கள், . இவர் அர்ப்பணிப்புடன் அப்போதில் இருந்து செயற்பட்டுள்ளார்.
உங்களுக்கு வந்த கடிதங்களில் இந்த கடிதத்தை உங்களால் மறக்க முடியாது. அப்படி தானே ?
பதில் :- ஆம், இவ்வாறான அர்ப்பணிப்புடன் செயற்படும் நபர்கள் உள்ளனர்.
கேள்வி :- ஆம். எவ்வாறு இருப்பினும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உள்ள திணைக்களங்களில் சட்டமா அதிபர் திணைக்களம் இவ்வாறான நிலை யில் எல்லைக்கு அப்பால் என்ன செய்ய முடியும் என நினைக்கின்றீர்கள் ?
பதில் :- இவ்வாறான மனுக்கள் வரும்போது எம்மால் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த முடியும். காத்தான்குடி விடயத்தில் உரிய காரியம் நடக்க வேண்டும் என்றே நினைத்தேன். அதனால் தான் உயர் அதிகாரிகளுக்கு கூறியும் ஓ.ஐ.சி யை வரவழைத்தும் முயற்சிகளை எடுத்தேன்.
கேள்வி :- இந்த கடிதம் ஜனாதிபதிக்கு, சட்டமா அதிபருக்கு வேறு சிலருக்கு அனுப்பியுள்ளாரா?
பதில் :- அனுப்பியதாக இருந்தாலும் கிடைத்ததா என்று தெரியாது.
கேள்வி:- அப்போது நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவிற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பதில் :- ஆம்
கேள்வி :- அது உறுதியாக தெரியுமா? உங்களுக்கு பதில் வரவில்லையா?
பதில் :- அவர் வேறு கடிதங்களுக்கு எல்லாம் பதில் அனுப்புவார். ஆனால் இந்த கடிதத்திற்கு எந்த பதிலும் வரவில்லை.
கேள்வி :- சட்டமா அதிபருக்கு நேரடியாக கொடுத்தால் மட்டுமா நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?
பதில்:- கையில் கொடுத்ததற்கு முக்கியம் கொடுக்கவில்லை,ஆனால் காத்தான்குடியில் இருந்து மௌலவி ஒருவர் வந்து கொடுத்த கடிதத்தை பார்த்து அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நினைத்தேன்.
ஏனையவை தபால் மூலமாக வந்தாலும் அவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். ஆனால் உண்மையான முஸ்லிம் மனிதராக தமக்கு அமைதியாக வாழவேண்டும் என்ற கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று நினைத்தேன். இந்த பயங்கவராத அமைப்பு சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புபட்ட அமைப்புகள் இவர்களை ஐ.சி.சி.பி.ஆர் என்று கூறி கைவிடக்கூடாது.
அதிக கவனத்துடன் பார்க்க வேண்டிய விடயமாகும். சஹரான் விடயத்தில் அவரது பிரச்சாரங்களை எமக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து யார் தீர்மானம் எடுக்க வேண்டும் நானா ?
இதற்கு உரிய நபர்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இன்றுவரை எமக்கு கொடுத்துள்ள கோப்புகளில் எந்த ஆதாரங்களும் இல்லாத சாட்சிகள் மட்டுமே உள்ளன. சில காகிதங்களை வைத்து எவ்வாறு வழக்கு தொடர்வது.
கேள்வி :- அடுத்த கோப்புக்கு ஏன் நீங்கள் பதில் கூறவில்லை ?
பதில் :- அதற்கு எதிராக வழக்கு தொடரவும் முடியாது. அதில் 14 இறுவெட்டுக்கள் மட்டும்தான் உள்ளன.
கேள்வி :- நான் பொறுமையாக கேட்கிறேன் நீங்கள் ஆவேசப்பட வேண் டாம்.
பதில் :- எனது இயல்பு அது.
கேள்வி :- சக்திக்க என்ற நபரை இந்த விடயத்தில் மூன்று மாதங்களாக கைதில் வைத்துள்ளனர். அவர் முகப்புத்தகத்தில் இனவாத கருத்துக்களை முன்வைத்தார்,அதற்கு நடவடிக்கை எடுக்க முடிந்தது என்றால் இதில் ஏன் அவ்வாறு செய்ய முடியாது ?
பதில் :- அது வேறு இது வேறு, சக்திக்க விடயத்தில் முறைப்பாடுகள உள்ளன. சஹரான் விடயத்தில் அவ்வாறான முறைப்பாடுகள் இல்லை.
கேள்வி :- இருவெட்டுக்களில் உள்ள கருத்துக்களில் முரண்பாடுகள் தெரியவில்லையா ?
பதில் :- இருந்தன,
கேள்வி :- அப்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?
பதில் :- யார் சாட்சிமளிப்பது? நானா சாட்சியமளிக்க முடியும்.
கேள்வி :- சக்திக்க விடயத்தில் முறைப்பாடு உள்ளது இதில் சஹ்லான் மௌலவியும் முறைப்பாட்டை கொடுத்துள்ளார். இதில் போலீசாரும் உங்களிடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.
கைது செய்ய ஒரு ஆலோசனை வழங்குங்கள் என கூறியுள்ளனர். சஹரான் குறித்து காரணிகள் கூறப்பட்டுள்ளன. நீங்கள் ஏன் ஆலோசனை வழங்கவில்லை. இந்த தவறில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது.
பதில் :- இரண்டு விதத்தில் பார்ப்பதாக கூறும் காரணியை நான் ஏற்றுகொள்ள மாட்டேன். பயங்கரவாதி ஒருவர் கொலைகளை செய்ய தயாராக உள்ளார் என் றால் குற்றவியல் சட்டத்தில் ஆலோசனைகள் உள்ளன.
இதில் எமது ஆலோசனைகள் அவசியம் இல்லை.கைது செய்யலாம். அதே போல் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தை விட குற்றவியல் சட்டம் பாரதூரமானது. குற்றவியல் சட்டத்தில் தான் இதனை கையாள வேண்டும்.
கேள்வி :- இல்லை,உங்களிடம் கேட்ட கேள்விக்கு நீங்கள் ஆலோசனை வழங்கவில்லை. ஐ.சி.சி.பி.ஆர் மற்றும் குற்றவியல் சட்டம் இரண்டும் நெருக்க மானது. நீங்கள் ஏன் ஐ.சி.சி.பி.ஆர்இல் இதனை கேட்கின்றனர் என சிந்தித்து பார்த்திருக்க வேண்டும்.
பதில் :- இவை கணினி பயப்படுதப்பட்ட சான்றுகள். இவற்றை கையாள வழிமுறைகள் உள்ளன. கேள்வி :- அப்படியென்றால் சக்திக்கவை கைதுசெய்த விடயம் ? அவரே அவரை கைது செய்திருக்க முடியாதே.
கேள்வி :- இது ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துக்களே?
பதில் :- அப்படி இல்லை, காணொளியில் அந்த நபர் நான்தான் உரிய நபர் என்று உறுதியளிக்க வேண்டும். இதில் அவ்வாறு இல்லையே.
கேள்வி :- கடிதத்தில் வந்ததும் பொலிசார் அனுப்பியதும் ஒரே காரணி தானே ?
பதில் :- ஆம், விடயம் ஒன்று தான்.
கேள்வி :- ஒரே காரணம் குறித்து இரண்டு கோப்புகள் வருகின்றன.அவ்வாறு வரும் வேளையில் ஒரு விடயம் குறித்து இரண்டு மூன்று வழிமுறைகளில் காரணிகள் வரும் வேளையில் நீங்கள் ஒரு விடயத்தில் பார்த்து சாட்சியங்கள் போதவில்லை என்றால் அதே விடயத்தில் மற்றைய ஆதாரத்தை வைத்து செயற்பட முடியாதா ?
பதில் :- இல்லை, இதில் கோப்பு வரும்வரையில் விசாரணைகள் முன்னெ டுக்கப்படவில்லை. நாம் அதனையே பார்ப்போம். ஒரே நேரத்தில் கோப்புகள் கிடைக்கவும் இல்லை.
கேள்வி :- கிடைத்தவுடனும் நீங்கள் ஒப்பிட்டு பார்க்கவில்லையா ?
பதில் :- பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை நடத்துவது தெரியப்படுத்தியி ருந்தால் நாம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும். எமக்கு மட்டும் அல்ல மௌலவிக்கும் அறிவிக்கவில்லை.
கேள்வி :- சட்ட வாத விவாதம் இருக்கலாம் ஆனால் ஒரு பயங்கரமான சம்பவத்துக்கு இவை அனைத்தும்.துணைபோன விடயஙகளாகும். மாற்று வழி ஒன்றினை கையாள வேண்டும் தானே.
பதில் :- கடிதத்தில் இருக்கும் விடயமானது மத செயற்பாடுகள் என்று தான் உள்ளது, இறுதியாக அடிப்படைவாதத்திற்கு தள்ளபடும் என்றே கூறப்படுகின் றது. ஆனால் பயங்கரவாதம் என கூறவில்லை.