ஐ.தே.கவின் புதிய கூட்டணி அமைக்கும் தீர்மானம் நிராகரிப்பு.! (காணொளி)
ஐக்கிய தேசியக் கட்சியினால் உருவாக்கப்படவுள்ள கூட்டமைப்பு தொடர்பான யாப்பை, எதிர்வரும் 5ஆம் திகதி கைச்சாத்திடுவதற்கு செயற்குழுவில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அலரி மாளிகையில் இன்று கூடியது.
புதிய கூட்டமைப்பை உரு வாக்குவதற்கான யாப்பை எதிர்வரும் 5ஆம் திகதி கைச்சாத்திடுவதற்கு பிரே ரிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த யாப்பில் பல்வேறு குழறுபடிகளும் தெளிவின்மையும் காணப்படுவதாக செயற்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
தற்போது காணப்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு கட்சியின் தலைமைத் துவத்தை ஏற்க, தாம் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேதமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.