ஒன்றுகூடி உரிமைக் குரல் எழுப்பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன ?
கன்னியா வெந்நீருற்றுப் பகுதி வளாகத்திலுள்ள பழைமை வாய்ந்த பிள்ளையார் ஆலயத்தை இடித்து பௌத்த தாது கோபுரம் அமைக்கும் முயற்சிக்கு எதிராக தென்கயிலை ஆதீன அடிகளார் குருமுதல்வர் அகத்திய அடிகளாரின் தலைமையில் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது பதற்றமான நிலை ஏற்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸார் தடையும் விதித்துள்ளனா்.
அத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படக்கூடாதென பெரும்பான்மையின மக் கள் அச்சுறுத்தும் தொனியில் தெரிவித்ததையடுத்து தென்கயிலை ஆதீன அடிகளார் குருமுதல்வர் அகத்திய அடிகளாரின் கோரிக்கையையடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதன்போது பொது மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதுடன் உள்ளே நுழைந்தால் சுடு தேநீரை ஊற்றி கொல் வோம் என பெரும்பான்மையினர் சிலர் கன்னியா குரு முதல்வர் அகத்திய அடிகளாரையும் தர்ம கர்த்தாவையும் அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கன்னியா வெந்நீருற்றுப்பகுதியை பௌத்த மயமாக்கவும் இவ்வாளகத்திலுள்ள பழமை வாய்ந்த பிள்ளையார் ஆலயத்தை இடித்து பௌத்த தாது கோபுரம் ஒன்று அமைக்கும் முயற்சிக்கு எதிராக தென்கயிலை ஆதீன அடிகளார் குருமுதல்வர் அகத்திய அடிகளாரின் தலைமையில் கன்னியா மரபுரிமை அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்திருந்த அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.
2000 மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் புத்திஜீவிகள் பொது மக்கள் சுமார் 10 மணிளவில் ஒன்று கூடியிருந்தனர். அவர்கள் கன்னியா பிரதான வீதியில் ஒன்று கூடவேண்டியநிலை ஏற்பட்டது.
போராட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே கன்னியா பிரதான வீதியில் இராணுவமும் பொலீஸாரும் குவிக்கப்பட்டிருந்ததுடன் கன்னியா நீரூற்றுக்கு செல்லும் வழியும் தடைகள் போட்டு பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பலத்த பாதுகாப்பு இடப்பட்டிருந்தது.
இதற்கு இடையில் கன்னியா வெந்நீரூற்றுக்கு செல்லும் பிரதான நுழைவாயில் அடைக்கப்பட்டு பொதுமக்கள் செல்லாதவாறு பொலிசார் காவல் காத்து நின்றதுடன் நீரூற்று வளாகப்பகுதியிலும் பெருந்தொகையான பொலி சார் குவிக்கப்பட்டிருந்தனர்.
10 மணியளவில் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடி பிரதான வீதியிலிருந்து கன்னியா வெந்நீரூற்றுக்கு அமைதியான முறையில் செல்ல முற்பட்டனர் அவ்வேளையில் பொலிசார் தடைகளையிட்டு கன்னியாவுக்குள் செல்வதற்கு அனுமதியில்லை என்றும் இதற்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது என்றும் தெரிவித்ததுடன் உப்புவெளி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தடையுத்தரவுப்பத்திரத்தை தலைமை தாங்கிச்சென்ற ஆதீன குருமுதல்வரிடம் காண்பித்தார்.
இதன்போது ஆதீன குருமுதல்வார் நாம் ஆப்பாட்டம் செய்யவோ அல்லது யுத்தம் செய்யவே வரவில்லை அமைதியான முறையில் கன்னியா பிள்ளையார் ஆலயத்தை வழிபட அனுமதி தாருங்கள் என கோரிக்கை விடுத்தார். எனினும் அவரின் கோரிக்கை அதிகாரியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இதனையடுத்து வந்திருந்த மக்களுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடை யில் வாக்குவாதம் நிகழ்ந்தது. அதைத்தொடர்ந்து கன்னியா குருமுதல்வர் அகத்திகள் அடிகளார் மற்றும் கன்னியா பிள்ளையார் ஆலய தருமகர்த்தா ஆகிய இருவருக்கு மட்டும் ஆலய வளாகத்துக்கு செல்ல அனுமதிவழங்கப்பட்ட நிலையில் பொலிசார் பிரதான வீதியிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவிலுள்ள வெந்நீரூற்றுப்குதிக்கு இருவரையும் அழைத்து சென்றனர்.
அப்போது பொலிஸ் அதிகாரிகளுக்கு முன்பாகவே உள்ளே நுழைந்தால் சுடு தேநீரை ஊற்றி கொல்லுவோம் என பெரும்பான்மையின மக்கள் கன்னியா குரு முதல்வர் அகத்திய அடிகளாரையும் தர்ம கர்த்தாவையும் அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கன்னியா வெந்நீரூற்றுக்கு முன்பிருந்த தமிழ் வர்த்தகர்கள் கடைகளைபூட்டி சென்றுள்ளனர். ஏனைய இனத்தவர்களது கடைகள் திறந்திருந்த நிலையில் இக்கடைக்கு வெளியே நூற்றுக்கணக்கான பெரும்பான்மையின மக்கள் கூடியிருந்தனர்.
தென்கயிலை சுவாமிகளும் தர்ம கர்த்தாவும் தமக்கு நேர்ந்த அவமானத்தை பொலிஸ்; அதிகாரிகளுக்கு முறையிட்டும் அவர்கள் பொறுப்பெடுக்கவில்லை. முறைப்பாடு செய்தால் மாத்திரமே சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய முடியுமென கூறினர்.
இச்சம்பவத்தினால் நிலமை கட்டுக்கடங்காது; போன நிலையில் பொது மக்களுக்கும் பொலீசாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. நிலைமை கட்டுமீற இருந்த நிலையில் ஆதீனத்தின் கௌரவத்தை காப்பாற்றுங்கள் வன்நடத்தைகள் வேண்டாமென சுவாமி கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து நிலைமைக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இச்சந்தர்ப்பத்தில் யாழிலிருந்து வருகை தந்திருந்த சின்மயா மிஷன் சுவாமிகளும் உடனிருந்து நிலமைகளை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டதுடன் கூடியிருந்தவர்கள் முன்னர் உரையாற்றினார்.
அவர் தனது உரையில் தமிழ் மக்களுடைய தொன்மங்களும் மரபுரிமைகளும் பாதுகாக்கப்படவேண்டுமென வினயமாக வேண்டினார். கடந்த வாரம் ஜனாதிபதி அலுவலகம் கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பௌத்த தாது கோபுரத்தை அமைக்கும்படி தொல்பொருள் திணைக்களத்துக்கு ஆணைபிறப்பித்திருந்த நிலையில் தொல் பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மண்டாவெல 6..6..2019 திகதியிட்ட கடிதம் மூலம் திருகோணமலை அரச அதிபருக்கு ஒரு கட்டளை பிறப்பிருந்தார்.
அரசியல் தலையீடோ அல்லது எந்த தலையீடுகளோ ஏற்பட்டாலும் அதை கவனத்தில் கொள்ளாது; பிள்ளையார் ஆலயம் இருந்தவிடத்தில் பௌத்த தாது கோபுரத்தை அமைக்கும் படி வழங்கிய கட்டளைக்கு அமைய தொல் பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத் தில் பௌத்த தாது கோபுரம் அமைக்கும் முயற்சி கடந்த வாரம் முன்னெடுக் கப்பட்ட நிலையிலையே மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி தலைவர்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திருகோணமலை நகர சபை உப்புவெளிபிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.
இறுதியாக தென்கயிலை ஆதீன குரு முதல்வர் அகத்திய அடிகளார் ஊடக அறிக்கையொன்றை கூடியிருந்தவர்கள் முன் வாசித்தார். அவ்வறிக்கையில் கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவில் வரலாறு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் இருப்புக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழின இருப்புக்கும் மிக அவசியமானது. சிங்கள பௌத்த அரசானது.
தமிழர் வரலாற்றை மகாவம்ச வரலாறாக திரிபு படுத்த முயற்சிக்கின்றது. இதை தமிழர்தாயகத்தில் பல்வேறு திணைக்களங்களின் ஊடாக நடைமுறைப்படுத்திவருகிறது. சிங்கள பௌத்த மயமாக்கலில் சைவ ஆலயங்கள் பாதிக்கப்படுவது யாவரும் அறிந்தவிடயம். வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் சிங்கள பௌத்த மயமாக்கம் மிக பாரிய அளவில் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக முள்ளி வாய்க்கால் தளத்தில் வீரியமாக முன்னெடுக்கப்படுன்கிற நிலையில் அது தொடர்பான எதிர்வினை நேர்மையான கூட்டு தந்திரோபாய நகர்வுகள் தமிழ் அரச தரப்பிலோ அல்லது;
தமிழ் சிவில் அமைப்புக்களிடையையோ இருப்பதாக தெரியவில்லை . கன்னியா பிள்ளையார் ஆலயம் தொடர்பில் பல தரப்பினரிடமும் பேசியுள் ளோம். பல தளங்களில் வெளிப்படுத்தியுள்ளோம்.
ஆனால் இதுவரைக்கும் அசமந்த போக்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவது தொடர்பில் நாம் சந்தேகம் கொள்கிறோம். இனியும் இவ்வாறான நிலைமை தொடருமென்றால் மக்கள்மயப்பட்ட வன்முறையற்ற தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.
எமது போராட்டங்கள்தான் தீர்வாக அமையுமென்றால் அந்த வன்முறையற்ற அமைதி வழிப்போராட்டங்களுக்கு நாம் செய்ய ஆயத்தமாக வேண்டும் .நாங் கள்; வேறு இன மத மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர்.
இருந்த போதிலும் தமிழின இருப்பை உறுதிப்படுத்துவதோடு இலங்கையின் பல்லினத்தன்மையையும் தொடாந்து பேணுவதற்கு அரசு உறுதி செய்ய வேண் டுமெனத் தெரிவித்துள்ளாா்.