உயிர்த்த ஞாயிறு தினத்தில் 25 தாக்குதல்களை நடத்த திட்டம் - குற்றப்புலனாய்வு பிரிவு பணிப்பாளரின் வாக்கு மூலம்
உயிர்த்த ஞாயிறு தினத்தில் 25 தாக்குதல்களை நடத்த திட்டம் வகுக்கப்பட்டது. எனினும் புலனாய்வு தகவல்கள் மூலமாக அவை முறியடிக்கப்பட்டுள்ளன. தாஜ் சமுத்திரா ஹோட்டலில் குண்டுதாரியொருவர் 2, 3 தடவைகள் குண்டை வெடிக்க வைப்பதற்காக முயற்சிப்பது தொடர்பான சீ.சீ.ரீ.வி வீடியோ பதிவுகள் உள்ளன.
அந்த குண்டு தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடிக்காது போயிருக்க லாம். அதன்பின்னர் அந்த நபர் தெஹி வளையில் ஹோட்டல் அறைக்குள் அந்த கோளாறை பரிசோதிக்க முயற்சித்த போது அது வெடித்திருக்கலாம் என குற்றப்புலனாய்வு பிரிவு பணிப்பாளர் ஷானி அபேசேகர நேற்று பாராளுமன்ற தெரிவுக்குழு முன் சாட்சியமளித்துள்ளாா்.

சம்பவ தினத்தன்று தாஜ் சமுத்திரா ஹோட்டலில் முக்கியஸ்தர் யாரேனும் இருந்ததாக தாங்கள் அறியவில்லையெனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று புதன்கிழமை சாட்சியமளிக்கையில் இவ்வாறு தெரிவித்துள் ளார்.
அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்; 2018 டிசம்பர் மாதத்தில் மாவனெல்லையில் புத்தர் சிலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. இது தொடர் பாக நாங்கள் விசாரணைகளை முன்னெடுத்து வந்தோம். இச் சம்பவம் தொடர்பாக 2 பேர் தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவர்கள் தொடர்பாக தேடிச் செல்லும்போது தொலைபேசி இலக்கங்களை அடிப்படையாக கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. அந்த தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.
அது சாஹீட் என்பவரால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி அவரின் விலாசத்தை தேடி சென்று அவரை கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்போது 4 பேரை கைது செய்ய முடியுமாக இருந்ததுடன் பெருமளவு பொருட்களையும் மீட்டோம்.
105 கிலோ வெடி பொருட்களையும், வெடிக்க வைக்கும் கருவிகள் உள்ளிட்டவையும் மீட்கப்பட்டன. இவர்களிடம் விசாரணை நடத்தும் போது சஹ்ரான் என்பவர் தொடர்புபட்டிருப்பது தெரியவந்தது. இந்நிலையில் சஹ்ரானை தேடி பல பிரதேசங்களில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தோம்.
அத்துடன் குறித்த பொருட்களை கொண்டு செல்ல உதவிய வாகனத்தையும் மீட்டெடுத்தோம். சஹ்ரான் தொடர்பாக பல இடங்களுக்கு சென்று சாட்சியங்களை பதிவு செய்து வந்தோம்.
நாங்கள் அனேகமாக தொலைபேசி இலக்கங்களை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்திய போதும் அவர்கள் தீரிமா என்ற செயலியை பயன்படுத்தியதால் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாது இருந்தது.
என்றாலும் இவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல முடியாது மாவனெல்லை நீதிமன்றத்தினால் தடையுத்தரவையும் பெற்றுக்கொண்டோம். கைது செய்யப்பட்ட 4 பேரில் இருவரை அந்த சம்பவத்துடன் தொடர்பு இல்லாமையினால் விடுவிக்க நடவடிக்கையெடுத்தோம்.
நன்றாக தேடிப்பார்த்தே அவர்களை விடுவிக்க நடவடிக்கையெடுத்தோம். அவர்களுக்கு விலாசத்தை மாற்ற முடியாது, ஒவ்வொரு மாதமும் சீ.ஐ.டி.யில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளுடனேயே அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
எவ்வாறாயினும் இவ்வாறாக விடுவிக்கப்பட்டவர்களில் இருவரே சங்ரில்லா ஹோட்டலில் குண்டை வெடிக்க வைத்ததாக தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்கள் அல்ல. காரணம் குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னர் சீ.ஐ.டி.யில் கையெழுத்திட்டுள்ளனர்.
கடந்த மாதங்களிலும் அவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த மாத இறுதியிலும் அவர்கள் சீ.ஐ.டி.யில் கையெழுத்திடுவர். அவர்கள் தொடர்பாக போதுமான சாட்சிகள் இல்லாமையினால் நிபந்தனைகளுடன்தான் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சகலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக 80 வீதம் விசாரணை நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளன. சஹ்ரானின் குழு வில் பலர் உயிரிழந்துள்ளனர்.
மற்றையவர்கள் எங்களின் கைதில் இருக்கின்றனர். 69 பேர் சீ.ஐ.டியில் கைதாகியிருக்கின்றனர். பல்வேறு திட்டங்களை அவர்கள் மேற்கொண்டிருந்தனர். ஆனால் வனாத்துவில்லு சம்பவத்தின் பின்னர் அவர்களின் திட்டங்கள் குழம்பியுள்ளன. இந்த அமைப்பில் சஹ்ரானின் குழுவினர் இறந்தனர்.
இன்னும் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வவுணதீவு கொலை சம்பவத்தில் முழுமையாக இது புலிகளின் செயல் என்றே புலனாய்வு துறை உள்ளிட்ட சகல துறையினரும் கூறினார்கள். மாவ னெல்லயில் துப்பாக்கிசூடு நடத்தியவர்களும் இவர்கள் என்பது பின்னர் கண்டறியப்பட்டது.
வெளிநாட்டில் இருந்து கைது செய்யப்பட்ட நபர்கள் மூலமாக பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. வெடிபொருள் உள்ளிட்ட ஆயுதங்கள் அதிகமானவை கண்டறியப்பட்டன. இது கண்டறியாதிருந்திருந்தால் 25 குண்டுகள் வெடித்திருக் கும் இரசாயான பகுப்பாய்வு மூலம் அமோனியம் நைற்றேற்று என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யூரியாவுடன் நைற்றேற் கலக்கப்பட்டுள்ளது. அது இங்கேயே செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டவை அல்ல. நாங்கள் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சீ.சீ.ரீ.வி. படங்களை பார்த்தோம். அதில் குறித்த நபர் இரண்டு மூன்று தடவைகள் முயற்சித்துள்ளாா்.
பின்னர் வெடிக்கவில்லை. பின்னர் அந்த குண்டுடன் பள்ளிக்கு செல்கின்றார். பின்னரே தெஹிவளை பகுதியில் அது வெடிக்கின்றது. எவ்வாறாயினும் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் அது வெடிக்காது போனமைக்கு காரணங்கள் இருக்கலாம்.
அதாவது தொழில்நுட்ப ரீதியில் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தமையினால் அது வெடிக்காது போயிருக்கலாம். பின்னர் அவர் தெஹிவளையில் ஹோட்டல் அறையில் அந்த கோளாறு தொடர்பாக ஆராயப் போகும் போதே அது வெடித் துள்ளது.
ஆனால் கூறப்படுவதை போன்று தாஜ்சமுத்திரா ஹோட்டலில் விசேட பிரபு இருந்ததாக தெரியாது. உண்மையில் என்ன நடந்தது என்பதனை ஆராய வேறு வழியில்லை. ஆனால் அவர் வெடிக்க வைக்க முயற்சித்தமை வீடியோவில் உறுதியாகியுள்ளது.
இந்த விடயத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பாக எங்கள் மீது சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். எங்களுக்கு மருத்துவ விடயங்கள் தொடர்பாக தெரியாது. எவ்வாறாயினும் 143 முறைப்பாடுகளே பிள்ளைகள் இல்லையென தெரிவித்துள்ளன.
ஆனபோதும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆராயாது எங்களால் ஒன்றும் செய்ய முடியாதெனத் தெரிவித்துள்ளாா்.